
மறைந்த நடிகை சித்ராவை பிறந்தநாளன்று நினைவுகூரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கம்பம் மீனா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கடந்த ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலம் நடிகை சித்ராவின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் சேர்ந்து செலவழித்த சில அழகிய தருணங்களை நடிகை கம்பம் மீனா ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை சித்ரா
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுகளுடன் பயணித்து, எக்கச்சக்கமான மக்களின் அன்பில் திளைத்து மறைந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா. ஆரம்பத்தில் தமிழ் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா பின்னர் சீரியல்கள் மூலம் ஒரு நடிகையாக உயர்ந்தார். சீரியல்களில் எந்தவொரு வேடம் கொடுத்தாலும் அதை கசித்தமாக செய்து மக்களின் கிளாப்களை அள்ளிய நடிகை சித்ரா குறுகிய காலத்திலேயே மக்கள் ரசிக்கும் நாயகியாக மாறினார்.
இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் நடிகை ஆலியா மானசா – ரசிகர்கள் ஷாக்!
அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவுக்கு ஏகப்பட்ட பெயரை சம்பாதித்து தந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சீரியலில் சித்ரா நடித்த முல்லை கதாப்பாத்திரம், மக்கள் இவரை தங்கள் வீட்டு பிள்ளை போல பார்க்கும் அளவுக்கு வரவேற்புகளை பெற்றுத் தந்தது. இப்படி புகழின் உச்சியில் இருந்த கால கட்டத்தில் ஹேம்நாத் என்பவரை காதலித்து, கரம் பிடிக்க இருந்த நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Exams Daily Mobile App Download
இவரது மறைவு தமிழ் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது. இப்போது நடிகை சித்ரா இறந்து ஒரு ஆண்டு கடந்திருக்கும் நிலையில் கூட ரசிகர்கள் இன்னும் அவரை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இன்று (மே.2) நடிகை சித்ராவின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலம் கம்பம் மீனா, அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது நடிகை சித்ராவின் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.