“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் தனது கணவருக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு – வைரலாகும் வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் தனது கணவருக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு - வைரலாகும் வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் தனது கணவருக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு – வைரலாகும் வீடியோ!

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் என்ற கதாபாத்திரம் மூலமாக பிரபலமானவர் நடிகை சுஜிதா, அவர் தனது கணவரின் பிறந்தநாள் அன்று செய்த சர்ப்ரைஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை சுஜிதா:

நடிகை சுஜிதா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அவர் தற்போது விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூத்த அண்ணியாக தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் தான் அவருடைய முதல் என்ட்ரி இருந்தாலும் சீரியலில் நடிக்கவே அவருக்கு விருப்பமாக இருப்பதால் அதில் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

‘வெண்பா இஸ் பேக்’ பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின் மிரட்டலான ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில் அவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி குடும்பத்தை பற்றிய பல தகவல்களை கொடுத்து வருகிறார். ஏற்கனவே தனது சொந்த ஊருக்கு சென்று, அங்கே தனது சொந்தங்களுடன் வீடியோ வெளியிட்டார். அவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் தனது கணவர் பிறந்தநாள் என்பதால் காலையில் கோவிலுக்கு சென்றது முதல், அவருக்கு பரிசாக விநாயகர் கொடுத்தது வரை வீடியோவில் காட்டி இருக்கிறார்.

காது குத்து விழாவில் பிரச்சனையை கிளப்பிய மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அடுத்த எபிசோட்!

மேலும் தனது கணவருக்கு பிறந்தநாள் ட்ரெஸ் நான் தான் எடுப்பேன் என சொல்லி கடைக்கு கூட்டி சென்று அங்கேயும் அவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் சீரியலில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் அதே போல இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கடைசியாக தனது கணவருக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here