சரவண விக்ரம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஆன கதை – என்ஜினீயர் டூ நடிகர்!

0
சரவண விக்ரம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் ஆன கதை - என்ஜினீயர் டூ நடிகர்!
சரவண விக்ரம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் ஆன கதை - என்ஜினீயர் டூ நடிகர்!
சரவண விக்ரம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஆன கதை – என்ஜினீயர் டூ நடிகர்!

தமிழக சின்னத்திரை உலகில் ஒரு சிலர் மட்டுமே மக்களால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். அந்தவகையில், தற்போது மிகவும் பிரபலமாக உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரமின் நிஜ வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் காண்போம்.

கடைக்குட்டி கண்ணன்:

வெள்ளித்திரையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே முன்னொரு காலத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களை விட அதிக புகழை சம்பாதிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் உள்ளனர். அதிக புகழ் மற்றும் ரசிகர்கள் உடையவர்களுக்கு என்று தனியாக பல ஆர்மிகள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அதிக ரசிகர்கள் மற்றும் புகழை அடைந்த நடிகர்களில் ஒருவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி சரவண விக்ரம்.

சொந்த வீடு வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகள் வாரி வழங்கும் கடன்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஆரம்பித்த புதிது முதல் கவனிக்கப்பட்டு வந்த ஒருவர் தான் சரவண விக்ரம். இவர் 3 அண்ணன்களுக்கு கடைசி தம்பியாக கடைக்குட்டியாக மிகவும் கலகலப்பான காதபாத்திரத்தில் நடித்திருப்பார். சீரியலில் வரும் அனைவரின் செல்லமாக இருப்பவர். தற்போது தொடரின் கதை அம்சத்தின் படி, குடும்பத்தின் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியில் வசிப்பது போல் காட்சிகள் வந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கதை படி அவரது அம்மா இறப்பிற்கு நிஜத்தில் இவர் மொட்டை அடித்து நடிப்பில் ஒரு படி மேலே சென்று விட்டார்.

IPL 2021: RR vs MI – டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! பவுலிங் தேர்வு!!

சரவண விக்ரம் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருச்செந்தூரில் முடித்துள்ளார். இவரது தந்தை பிரபல மினரல் கம்பெனியில் ஜிஎம் ஆக உள்ளார். குடும்பத்தினரின் விருப்பப்படி முதலில் இன்ஜீனியரிங் முடித்து விட்டு, அதன்பிறகு குடும்பத்தினரின் சம்மதத்தோடு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்துள்ளார். இதற்கு முன்னர் பல குறும்படங்களில் நடித்துள்ளார். அதன்மூலம் சின்னத்தம்பி சீரியலில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார். ஆயினும், பாண்டியன் ஸ்டார் கண்ணன் கதாபாத்திரம் தான் அவருக்கு அதிக ரசிகர்களையும், புகழையும் பெற்றுத்தந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!