மூர்த்தியின் மருத்துவ செலவிற்கு காசில்லாமல் அல்லாடும் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
மூர்த்தியின் மருத்துவ செலவிற்கு காசில்லாமல் அல்லாடும் குடும்பத்தினர் - ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தியின் மருத்துவ செலவிற்கு காசில்லாமல் அல்லாடும் குடும்பத்தினர் - ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தியின் மருத்துவ செலவிற்கு காசில்லாமல் அல்லாடும் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

உடனடியாக ஆபரேஷன் செய்தால் மட்டுமே மூர்த்தியை பிழைக்க வைக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் தற்போதைக்கு ஆபரேஷனுக்கு 2 லட்சம் வரை செலவாகும் எனக் கூறியதால் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தினர்கள் புலம்பும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிரும் முல்லையும் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியே சென்றதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. மூர்த்தி குணமாகி மறுபடியும் வீட்டிற்கு செல்வாரா அல்லது மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை வைத்து குடும்பம் இரண்டாகப் பிரிய போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதாவது முல்லையின் சிகிச்சைக்காக குடும்பத்தினர்கள் ஐந்து லட்சம் வரைக்கும் செலவு செய்ததை தற்போது வரைக்கும் குத்திக் காட்டிக் கொண்டே இருப்பதால் கதிரும் முல்லையும் கடுப்பாகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

கதிர் இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா என நினைத்து வீட்டை விட்டு வெளியே சென்றார். முல்லைக்காக செலவு செய்த அந்த 5 லட்ச ரூபாய் பணத்தை வேறு ஏதாவது கடையில் வேலை பார்த்தாவது கண்டிப்பாக அடைத்து விடுவேன் எனக் கூறிவிட்டு கிளம்பினார். முல்லையும் கதிரும் வீட்டை விட்டு கிளம்பும் போது நீ இந்த வீட்டை விட்டு சென்று விட்டால் இதற்கு பிறகு வீட்டிற்குள் வரவே முடியாது என மூர்த்தி கூறுகிறார். ஆனாலும் மூர்த்தி கூறியதை சற்றும் காதில் கேட்காமல் முல்லையும் கதிரும் வீட்டை விட்டு கிளம்பி செல்கின்றனர். இருவரும் வீட்டை விட்டு சென்ற உடனேயே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது

தமிழகத்தில் தொடரும் மின்தட்டுப்பாடு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

உடனடியாக குடும்பத்தினர்கள் அனைவரும் மூர்த்தியை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயத்தை அறிந்ததும் கதிரும் முல்லையும் கிளம்பி மருத்துவமனைக்கு செல்கின்றனர். மருத்துவர்கள் மூர்த்தியை பரிசோதனை செய்துவிட்டு இதயத்தில் 2-பிளாக் இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்தால் மட்டுமே பிழைக்க வைக்க முடியும். நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக ஆபரேஷன் செய்ய பணம் கட்டுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அவர் உயிர் பிழைக்கலாம் என கூறுகிறார். தற்போதைக்கு இரண்டு லட்ச ரூபாயை உடனடியாக கட்டி விட்டு வாருங்கள் எனக்கூறியதும் அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என குடும்பத்தினர்கள் அனைவரும் கதறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here