‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கை கருத்து – விஜெ தீபிகா ஓபன் டாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பழைய ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கை கருத்து - விஜெ தீபிகா ஓபன் டாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' பழைய ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கை கருத்து - விஜெ தீபிகா ஓபன் டாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பழைய ஐஸ்வர்யாவின் தன்னம்பிக்கை கருத்து – விஜெ தீபிகா ஓபன் டாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த தீபிகா அதன்பிறகு அளித்துள்ள பெட்டியில் தெரிவித்துள்ள தன்னம்பிக்கை கருத்துக்கள் ரசிகர்களால் அதிகம் பாராட்டுகளை பெற்றுள்ளது.

விஜெ தீபிகா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியின் முக்கிய சீரியல் வரிசையில் ஒன்றாக இருந்து வருகிறது. குடும்ப பாங்கான கதையம்சம் கொண்ட தொடராக இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் பிரபலமடைந்து உள்ளனர். அதில், கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணன் கதாபாத்திரம் காதலித்து திருமணம் செய்யும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதலில் விஜே தீபிகா தான் நடித்து வந்தார்.

செப்.20ம் தேதி 10 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இவர் திடீரென்று தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தது. பின்னர், அது உறுதியும் செய்யப்பட்டது. தீபிகாவின் முகத்தில் அதிக பருக்கள் இருந்தது தான் அவர் சீரியலில் இருந்து விலக்கப்பட்டதற்கான காரணமாக சொல்லப்பட்டது. இவரது வேடத்தில் நடிகை சாய் காயத்ரி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், தீபிகா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய வீடியோ கிளிப்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அதில், முகத்தில் பருக்களோடு இருக்கும் போட்டோவை பதிவிடுவது குறித்து சிலர் கேட்பதாக கூறியுள்ளார்.

அதற்கு, தன்னால் பருக்களை மறைத்து மேக்கப் போட்டு போட்டோ பதிவிட முடியும், ஆனால் தனக்கு இயல்பாக இருப்பது தான் பிடித்திருப்பதாகவும், வெளிப்படையாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை என்றும் தனக்கு அதுவே மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். சாதாரண முகப்பரு பிரச்சனையை ஏதோ மிகப்பெரிய குறையாக நினைக்கும் மனப்பாங்கு உள்ளவர்கள் வீட்டில் தன்னைப்போன்ற பெண்கள் இருக்கவே கூடாது என்று இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு – அரசு அறிவிப்பு!

மேலும், இது தனது ஆரம்பம் தான் என்றும், இன்னும் சாதிக்க நிறைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்களுக்கு இணையத்தில் ஆதரவு பெருகி வருகிறது. இவர் சீரியலில் நடித்ததை விட தற்போது அதிக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது, சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சரவணா விக்ரமுடன் இணைந்து ஓரு யூடியூப் சேனலை துவங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!