மணப்பெண்ணிற்கு அழகாக மேக்கப் போட்ட ஐஸ்வர்யா,மூர்த்திக்கு வரும் புது பிரச்சனை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

0
மணப்பெண்ணிற்கு அழகாக மேக்கப் போட்ட ஐஸ்வர்யா,மூர்த்திக்கு வரும் புது பிரச்சனை -
மணப்பெண்ணிற்கு அழகாக மேக்கப் போட்ட ஐஸ்வர்யா,மூர்த்திக்கு வரும் புது பிரச்சனை - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்து வருபவை!
மணப்பெண்ணிற்கு அழகாக மேக்கப் போட்ட ஐஸ்வர்யா,மூர்த்திக்கு வரும் புது பிரச்சனை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி ” பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யாவின் முதல் மணப்பெண் அலங்காரத்திற்கு மீனாவை உடன் செல்ல சொல்கிறார் மூர்த்தி. அதிகாலையில் மீனாவிற்கு விருப்பம் இல்லாமல் ஐஸ்வர்யாவுடன் செல்கிறார். மறுபக்கம் முல்லை கடையில் நஷ்டம் வர என்ன காரணம் என கண்டுபிடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஜீவாவிடம் என் அப்பாவிடம் இந்த வீட்டை கொடுத்தால் என்ன, அவர் ஓசியில் ஒன்றும் கேட்கவில்லையே என சொல்கிறார். உடனே ஜீவா சொந்தக்காரரிடம் கொடுக்க வேண்டாம் என சொல்வது உனக்கு புரியவில்லையா என கேட்க, என் அப்பாவிடம் வீட்டை கொடுத்தால் நாளைக்கு நமக்கு இந்த வீடு வந்துவிடும் என உன் வீட்டில் இருப்பவர்கள் பயப்படுவதாக சொல்கிறார். ஜீவா அதை கேட்டு சிரிக்கிறார். உடனே மீனா கோவித்து கொண்டு படுத்துக் கொள்கிறார். அலாரம் வைத்து படுக்க சொல்ல ஆனால் மீனா கேட்காமல் படுகிறார்.

முல்லை கடையின் கணக்கை பார்த்துக் கொண்டிருக்க கதிரை அழைத்து நஷ்டத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டதாக சொல்கிறார். நாம வாங்கும் விலையை விட குறைவான விலைக்கே விற்கிறோம் அதனால் தான் நமக்கு நஷ்டம் வருவதாக முல்லை சொல்கிறார். கதிர் இந்த விலைக்கே சாப்பிட ஆள் இல்லை என சொல்ல, ஆனால் முல்லை விலை அதிகமாக இருக்கும் கடைகள் நன்றாக சென்று கொண்டிருப்பதால் கண்டிப்பாக நம்மாலும் நன்றாக வருவோம் என நம்பிக்கை சொல்கிறார். பின் கதிரின் நண்பர் போன் செய்து வீடியோ ஒன்று வைரலாகி இருப்பதாக சொல்கிறார். முல்லை கதிர் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

உன் கல்யாணத்துல என்னால சமைக்க முடியாது? வெகுண்டெழுந்த பாக்கியா – நடந்த தரமான சம்பவம்!

மறுநாள் காலையில், ஐஸ்வர்யா காலையில் சீக்கரம் எழுந்திரிக்க தனம் நீ எழுந்திரிக்கமாட்டேன் என நினைத்ததாக சொல்கிறார். அது எப்படி என்னுடைய முதல் ஆர்டர் நான் சரியாக செய்ய வேண்டும் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மீனா எழுந்துவிட்டாரா என பார்க்க அவர் எழுந்திருக்கவில்லை. ஐஸ்வர்யாவும், தனமும் நேரமாகிவிட்டதாக சொல்லி மீனாவை அழைக்கின்றனர். அப்போது ஜீவா எழுந்து வந்து கதவை திறக்க தனமும் ஐஸ்வர்யாவும் மீனாவை எழுப்புகின்றனர். இவ்வளவு காலையில் எழுப்புவதாக மீனா எரிச்சல்பட மீனாவை குளிக்க அனுப்புகின்றனர். மீனா குளித்துவிட்டு வர, கண்ணன் சந்தோசமாக தூங்குறான் என கோவப்பட்டு அவன் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பிவிடுகிறார்.

Exams Daily Mobile App Download

பின் ஐஸ்வர்யாவும் மீனாவும் திருமண வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே ஐஸ்வர்யா மனப்பெண்ணிற்கு அழகாக அலங்காரம் செய்கிறார். மீனாவிற்கு காலையில் எழுந்தது தூக்கமாக வர அவர் ஓரமாக படுத்து தூங்குகிறார். ஐஸ்வர்யா மணப்பெண்ணை மிகவும் அழகாக அலங்காரம் செய்து விட மீனா அதை பார்த்து அழகாக இருப்பதாக பாராட்டுகிறார். மணப்பெண் தோழிகளும் நன்றாக இருப்பதாக பாராட்ட என்னுடைய கல்யாணத்திற்கும் நீங்க தான் பண்ண வேண்டும் என சொல்கின்றனர். ஐஸ்வர்யா எல்லாம் முடித்துவிட பெண் வீட்டார் வந்து பார்த்து அருமையாக இருப்பதாக சொல்கின்றனர்.

பின் அங்கே இருப்பவர்கள் என்னுடைய மகளுக்கும் நீங்க தான் மேக்கப் போட வேண்டும் என சொல்கின்றனர். பின் ஐஸ்வர்யாவிற்கு ரூபாய் 3500 பணம் கொடுக்க மீனா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்றால் சும்மாவா என ஐஸ்வர்யா சொல்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. இனி வரும் எபிசோடில் மூர்த்தி வாங்க இருந்த இடத்தை வேறு ஒருவர் கேட்க அதனால் என்ன செய்வது என தெரியாமல் மூர்த்தி திண்டாட்டத்தில் இருக்கிறார். இதெல்லாம் நாளைய எபிசோடில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here