அந்த முல்லையை விட இவங்க டக்கரா இருக்காங்களே.. தொடங்கப்பட்ட ஷூட்டிங் – லீக்கான புகைப்படம்!

0
அந்த முல்லையை விட இவங்க டக்கரா இருக்காங்களே.. தொடங்கப்பட்ட ஷூட்டிங் - லீக்கான புகைப்படம்!
அந்த முல்லையை விட இவங்க டக்கரா இருக்காங்களே.. தொடங்கப்பட்ட ஷூட்டிங் - லீக்கான புகைப்படம்!
அந்த முல்லையை விட இவங்க டக்கரா இருக்காங்களே.. தொடங்கப்பட்ட ஷூட்டிங் – லீக்கான புகைப்படம்!

விஜய் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் டாப் இடத்தில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் தற்போது மூன்றாம் முறை மாற்றப்பட்டுள்ளது. புதிய முல்லையாக நடிகை லாவண்யா வரும் எபிசோடுகள் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

புது முல்லை:

தமிழ் சின்னத்திரையில் புது விதமான கதையுடன் சீரியல்களை ஒளிபரப்பி முன்னணி சேனலாக விஜய் டிவி இருக்கிறது. இந்த சேனலில் 1000 எபிசோடுகளை கடந்து டாப் சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல். கூட்டு குடும்பம் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போல தான் இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் சொல்லும் அளவிற்கு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் அண்ணன் தம்பி பாசம் என்றாலும் அதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் தான் எடுத்துக்காட்டாய் இருக்கின்றனர்.

பிக் பாஸில் சீரியல் நடிகை ரச்சித்தா.. வெளியே ஏட்டிக்கு போட்டியாக முன்னாள் கணவர் செய்த காரியம்!

இந்நிலையில் தற்போது கதையில் பாசமான அண்ணன் தம்பிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது தம்பி கதிர், தனது மனைவி முல்லை உடன் வீட்டை விட்டு வெளியே சென்று, தனியாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். முதல் மாதம் ஹோட்டலில் நஷ்டம் வர, அதனால் முல்லையின் அக்கா மல்லி அவர்களை அவமானப்படுத்த, தற்போது தொழிலில் நல்ல லாபம் அடைந்துள்ளனர். ஒரு பக்கம் முல்லை கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

முதலில் முல்லையாக நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். அதன் பின் அவர் இறந்துவிட, அவருக்கு பதிலாக நடிகை காவ்யா அறிவுமணி களமிறங்கினார். முல்லையாக 2 ஆண்டுகளாக காவ்யா நடித்து வந்த நிலையில், தற்போது அவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை லாவண்யா, முல்லையாக நடிக்க இருக்கிறார். இன்றைய எபிசோடில் முல்லையாக லாவண்யா நடிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. அதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!