விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முக்கிய கதாபாத்திரமான முல்லை கர்ப்பமாக இருப்பது போல வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRPயில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் மட்டும் தான் நெகட்டிவ் கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. சாதாரண குடும்பத்தில் இருக்கும் அண்ணன், தம்பிகளுக்கு இடையே நடைபெறும் பாச போரட்டம் பற்றி தான் கதை அமைந்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் அண்ணன், தம்பிகளை விட அவர்களின் மனைவிகளுக்கு தான் ரசிகர்கள் அதிகம். மேலும் வழக்கமாக சீரியலில் இருக்கும் காதல் காட்சிகளை போல இல்லாமல் கதிர், முல்லை காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்!

முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் மறைவுக்கு பின் நடிகை காவ்யா அறிவுமணி முல்லையாக நடிக்க தொடங்கினார். அவர் முன்னதாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். முதலில் சித்ரா ரசிகர்கள் காவ்யாவை முல்லையாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் தன்னுடைய நடிப்பு திறமையால் தற்போது அவர் முல்லையாக அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். கதிரிடம் எனக்கு இப்பவே குழந்தை வேண்டும் என அடிக்கடி சொல்லி வருவதால் அடுத்து அவருக்கு தான் குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் யுகித்து இருக்கின்றனர்.

இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் ஆல்யா மனசா – கணவர் சஞ்சீவ் வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் முல்லை கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இருக்க, அது அவர் நடித்து வெளியாக இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி என்ற ஒரு வெப் சீரிஸ் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கேட்ட பின் தான் முல்லை ரசிகர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மேலும் அந்த வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தான் காவ்யா அறிவுமணி கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here