தனத்தை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் மூர்த்தி, தடுக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணனை பற்றி தனம் பேசியதும் மூர்த்தி அவரை ஆவேசமாக திட்டுகிறார். மூர்த்தியை எதிர்த்து கதிர் தனது அண்ணிக்கு ஆதரவாக கதிர் பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்கு தெரிந்த வகையில் சமைத்த உணவினை சாப்பிடுகின்றனர். அப்போது கண்ணன் தான் தனது அண்ணன் மற்றும் அண்ணிகளுடன் அமர்ந்து சாப்பிட்டது நினைவிற்கு வருகிறது. அதனை ஐஸ்வர்யாவிடம் கூறி வருந்துகிறார். அதனை கேட்டு விட்டு ஐஸ்வர்யா அவரை சமாதானம் செய்கிறார். இங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அனைவரும் தனத்திற்கு ஏற்பட்ட பொய் வலி குறித்து பேசுகின்றனர். பின்னர், ஜீவா தனது அண்ணன் குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மீனாவிடம் கூறுகிறார்.
38 வயதில் பிரபல நடிகை திரிஷாவிற்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அப்போது மீனா நமது குழந்தை கயலுக்கு இது போன்று நீ யோசித்தது உண்டா என்று ஜீவாவை கேட்கிறார். அதற்கு ஜீவா மீனாவை ஸ்டோர் ரூமுக்கு அழைத்து செல்லுகிறார். அங்கு ஒரு உண்டியலில் கயல் என்று எழுதி இருக்கிறது. அதனை காட்டி அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் நமது குழந்தை கயலுக்கு என்று சேர்த்து வைக்கின்றனர். எந்த கஷ்டம் வந்தாலும், இதனை செய்ய தவறியதில்லை என்று கூறுகிறார். இதனை கேட்டு மீனாவிற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
TN Job “FB
Group” Join Now
வீட்டின் ஹாலில் அமர்ந்து தனம் மற்றும் மூர்த்தி இருவரும் பேசி கொண்டு இருக்கின்றனர். அப்போது தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை பற்றி பேசுகிறார். கண்ணன் எவ்வளவு பொறுப்பாக குடும்பத்தினை நடத்துகிறார் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார். இதனை கேட்டு விட்டு மூர்த்திக்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது. மூர்த்தி அப்படி பாசம் இருக்கிறவள் அவர்களுடன் அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியது தானே என்றும் கேட்டு விடுகிறார்சத்தம் கேட்டு வெளியே வரும் கதிர் மற்றும் முல்லை என்னவென்று விசாரிக்கின்றனர். அப்போது தனம் நடந்ததை கூறுகிறார். இதனால் கோபப்படும் கதிர் அண்ணியை எதற்காக திட்டுகிறீர்கள் என்று கேட்கிறார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பேச வேண்டாம் என்றும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்த விடுகிறது.