சீல் வைத்து இழுத்து மூடப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை, கதறும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
சீல் வைத்து இழுத்து மூடப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கடை, கதறும் கதிர் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
சீல் வைத்து இழுத்து மூடப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கடை, கதறும் கதிர் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
சீல் வைத்து இழுத்து மூடப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை, கதறும் கதிர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைப்பது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மக்களின் மனம் கவர்ந்த விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலை பொருத்தளவு பேண்டஸி, சண்டை, மோதல், பழி வாங்குதல் என்று இல்லாமல் சாதாரணமான கூட்டு குடும்பத்தில் நடைபெறும் விஷயங்களை மையமாக வைத்து ஸ்வாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது. இது குடும்ப பாங்கான கதைக்களத்துடன் ஒளிபரப்பாவதால், இதில் என்ன ஸ்வரசியம் இருக்கும் என்று கேட்க முடியாது. ஏனென்றால் ரசிகர்கள் விரும்பக்கூடிய அளவுக்கு அமைந்திருக்கிறது இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதாப்பாத்திரங்கள்.

பக்கவாதத்தில் முடங்கிய தாத்தா, ராதிகா விஷயத்தில் சிக்குவாரா கோபி? பாக்கியலட்சுமி அடுத்த எபிசோட்!

இதில் குறிப்பாக கதிர் – முல்லை ரொமான்ஸ், மீனா – ஐஸ்வர்யாவின் நகைச்சுவையான சண்டைகள் என இந்த கதை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் தற்சமயம் கதிர், முல்லையின் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக கட்டப்பட்ட கடை இழுத்து மூடப்படுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வீட்டில் இருக்கும் ஜீவாவுக்கு போன் வர அவர் அவசரமாக கதிரை கூட்டிக் கொண்டு கடைக்கு செல்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

அங்கு, கடையை ஆய்வு செய்து கொண்டிருக்கும் அதிகாரிகள் சரியான அனுமதி இல்லாமல் கடையை கட்டி இருப்பதாக கூறி அதற்கு சீல் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போது, கடையை திறக்க இன்னும் 3 நாட்கள் தான் இருக்கும் நிலையில் இப்படி செய்ய வேண்டாம் என்று ஜீவா கெஞ்சுகிறார். மறுபக்கத்தில் கதிரும் அதிகாரிகளிடம் கடையை மூட வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார். ஆனால் அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்து விட்டு செல்ல கதிர் மூடி இருக்கும் கதவை பார்த்து கதறி அழுகிறார். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here