கதிருக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் முல்லை – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

0
கதிருக்காக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தை எதிர்க்கும் முல்லை - பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!
கதிருக்காக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தை எதிர்க்கும் முல்லை - பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!
கதிருக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் முல்லை – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனது கணவர் கதிருக்காக முல்லை, மூர்த்தி குடும்பத்தை எதிர்த்து பேசுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட காட்சிகளில் சில முக்கியமான திருப்பங்கள் அரங்கேற இருக்கிறது. இதுவரை மீனா மற்றும் தனத்தின் குழந்தைகளை வைத்து காட்சிகள் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டுமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம் புதிய பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறது. அந்த வகையில் முல்லை, தனது கணவருக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எதிர்த்து நிற்பது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தி குடும்பத்தினர் புதிய கடை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை மேற்பார்வையிடும் பொறுப்பு கதிருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கதிர் அந்த கடையின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் வாடிக்கையாளர் ஒருவருக்கு பணம் கொடுக்க சொல்லி கதிரிடம் சொல்லுகிறார் மூர்த்தி.

ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி – வெளியான ப்ரோமோ!

ஆனால் கடை வேலைகளில் பிசியாக இருந்ததால் பணம் கொடுக்க மறந்துவிடுகிறார் கதிர். அதனால் பணத்தை ஏன் கொடுக்கவில்லை எனவும் சும்மா இருந்து கொண்டு இதை மறந்து விட்டதாக ஜீவாவும், மூர்த்தியும் கதிரிடம் கேட்கின்றனர். இந்த வார்த்தையை பொறுத்துக்கொள்ளாத முல்லை, கதிர் ஒன்றும் வெட்டியாக இருக்கவில்லை என்றும், கட்டிட பணிகளில் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ததாகவும் கூறுகிறார்.

PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!

இதோடு நில்லாமல் கடை கட்டுவதற்கு தாங்கள் நகை எதுவும் கொடுக்கவில்லை என்பதால் கதிர் இந்த வேலையே செய்து வருவதாகவும் பேசுகிறார். முல்லையின் இந்த பேச்சால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அதிர்ச்சியடைந்தவாறு இந்த வார கதைக்களத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here