கண்ணன், ஐஸ்வர்யாவை தங்க வைத்து சாப்பாடு போடும் முல்லையின் அப்பா – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீடு இல்லாமல் ரோட்டில் அமர்ந்து கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் முல்லை தனது அப்பாவிற்கு போன் செய்து கண்ணனை அழைத்து சாப்பாடு போட முடியுமா? என்று கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறு விறுப்பான பல சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கண்ணனும், ஐஸ்வர்யாவும் தங்க வீடு இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் அமர்ந்திருக்க மூர்த்தி அந்த பக்கமாக வந்து இருவரையும் பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். மீண்டும் கண்ணன் அவர்களது வீட்டு வாசலில் வந்து நிற்க மூர்த்தி கண்டபடி திட்டுகிறார். உடனே கண்ணன் மனவருத்தத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார்.
பிரபல பிக்பாஸ் நடிகைக்கு மீண்டும் கொரோனா தொற்று – அவரே வெளியிட்ட பதிவு!
மீனாவும் தனத்திடம் கண்ணனுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று சொல்ல தனம் நம்ம உதவி செய்தால் மாமா வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என்று சொல்கிறார். அதனால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார். இன்றைய எபிசோடில் இதுவரை நடக்க நாளை முல்லை தனது அப்பாவிற்கு போன் செய்து கண்ணனை அழைத்து சாப்பாடு போடுமாறு சொல்கிறார். அம்மா எதுவும் சொல்லுவாளோ என்று சொல்ல, அவன் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று சொல்கிறார்.
TN Job “FB
Group” Join Now
அதன் பின்னர் அவர் ஒத்துக் கொள்ள கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை அவரது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மேலும் வீட்டில் வைத்து கண்ணனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் சாப்பாடு போடுகிறார். கண்ணன் அழுது கொண்டே சாப்பிட்ட இந்த காட்சியை பார்த்த பலருக்கு வருத்தத்தை தருகிறது. இதனையடுத்து சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் காணலாம்.