புது கடைக்காக நகைகளை கொடுக்கும் தனம் & மீனா, வருத்தத்தில் முல்லை – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

0
புது கடைக்காக நகைகளை கொடுக்கும் தனம் (ம) மீனா, வருத்தத்தில் முல்லை - இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
புது கடைக்காக நகைகளை கொடுக்கும் தனம் (ம) மீனா, வருத்தத்தில் முல்லை - இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
புது கடைக்காக நகைகளை கொடுக்கும் தனம் & மீனா, வருத்தத்தில் முல்லை – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில் புதிதாக கடை கட்டுவது குறித்து யோசனை சொல்லும் மூர்த்திக்கு, தனம் மற்றும் மீனா தங்களது நகைகளை கொண்டு வந்து கொடுக்கின்றனர். ஆனால் தன்னிடம் நகை இல்லை என நினைத்து முல்லை வருந்துகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த சில நாட்களாக ஒளிபரப்பான சோக கதைகளை தாண்டி தற்போது தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் மூர்த்தி வீட்டுக்கு முருகன் வருகிறார். அப்போது எல்லாரும் ஒன்றாக இருக்கையில் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும் என மூர்த்தி கூறுகிறார். என்னவென்று தனம் கேட்க, ரொம்ப நாளா புது கடை கட்டணும்னு தம்பிங்க யோசனை சொன்னாங்க என கூற, அது நல்ல விஷயம் என முருகன் கூறுகிறார்.

விவாகரத்து பற்றிய சிந்தனையில் கண்ணம்மா, அஞ்சலியை வற்புறுத்தும் வெண்பா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

ஆனால் பெரிய கடை கட்டுறதுக்கு கையில காசு இருக்கானு தனம் கேட்க, பேங்க்ல இருக்க பணத்தை வைச்சு கடையை கட்டுவதில் சிக்கல் இருக்குனு ஜீவா கூறுகிறார். அதாவது, பேங்க்ல இருக்க பணம் தளம் போட்டு பில்டிங் எழுப்ப போதாது அதனால் இன்னும் 3 லட்சம் அதிகமாக தேவைப்படும் என ஜீவா விளக்குகிறார். அப்போது தனம் உள்ளே சென்று தனது நகைகளை கொண்டு வந்து கடையை கட்டும் வேலையே துவங்க சொல்லுகிறார்.

ஆனால் மூர்த்தி, கதிர் எல்லாம் நகை வேணாம் என கூற தனம் பிடிவாதமாக நகையை வாங்க வேண்டும் என கொடுக்கிறார். அதனை வாங்க போகும் முன் மீனாவும் வந்து தனது நகைகளை கொடுக்கிறார். பிறகு அதனையும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் கடை கட்டுவதற்கு தன்னால் நகை எதுவும் கொடுக்க முடியவில்லை என முல்லை, கதிரிடம் கூறி வருத்தப்படுகிறார். ஒரு கடையை கட்ட முதலீடு முக்கியம் என்பதை விட அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும் என கதிர் அவரை தேற்றுகிறார்.

சரவண விக்ரம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஆன கதை – என்ஜினீயர் டூ நடிகர்!

ஆனால் முல்லைக்கு நகை வாங்கி தர வேண்டும் என கதிர் கூறுகிறார். பிறகு முருகன் வீட்டில் பார்வதி, மல்லி மூவரும் பிரஷாந்த் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மூர்த்தி குடும்பத்தாரை பார்க்கும் போது கோவம் வருவதாக மல்லி கூறுகிறார். பிறகு பார்வதியும், முருகனும் அங்கிருந்து கிளம்ப, தனம் வீட்டுக்கு முன்னால் இருக்கும் வீட்டுக்கு தான் கண்ணன், ஐஸ்வர்யாவை குடி வைக்கப் போவதாகவும், தனத்தின் நிம்மதியை கெடுக்க வேண்டும் எனவும் கஸ்தூரி கூறுகிறவாறு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here