‘பிரசாந்தை கல்யாணம் பண்ண மாட்டேன், அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா’ – இன்றைய எபிசோட்!

0
'பிரசாந்தை கல்யாணம் பண்ண மாட்டேன், அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா' - இன்றைய எபிசோட்!
'பிரசாந்தை கல்யாணம் பண்ண மாட்டேன், அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா' - இன்றைய எபிசோட்!
‘பிரசாந்தை கல்யாணம் பண்ண மாட்டேன், அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா’ – இன்றைய எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் இன்று கதிரை மேலே படிக்கச் சொல்லி மூர்த்தி வற்புறுத்துகிறார். ஜீவா கதிருக்கு வாழ்த்து தெரிவித்து கட் அவுட் ஒன்று வைத்து அசத்துகிறார். மறுபுறம் ஐஸ்வர்யா தனக்கு பிரசாந்தை பிடிக்கவில்லை என்று கஸ்தூரியிடம் கூறுகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரை மூர்த்தி மேற்கொண்டு படிக்க சொல்கிறார். இதனை மறுக்கும் கதிர் பின் கடையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேட்கிறார். அதற்கு மூர்த்தி கடையை தானும், ஜீவாவும் பார்த்துக் கொள்வோம் என்றும் கதிரை டிகிரி படிக்க சொல்கிறார். பின், இப்படியே பேசிக்கொண்டு இருவரும் வண்டியில் செல்கின்றனர். அப்போது கதிர் பாஸ் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கட் அவுட் இருக்கிறது. அதனை பார்த்து இருவரும் ஆச்சரியம் அடைகின்றனர்.

புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

இதனை யார் வைத்திருப்பார்கள் என்றும் யோசிக்கின்றனர். பின்னர், வீட்டிற்கு வந்து இது குறித்து அனைவரிடமும் கூறுகின்றனர். கதிர் தனது வீட்டில் உள்ள யாரோ தான் இப்படியாக செய்து இருக்கின்றனர் என்று கூறுகிறார். ஜீவா தான் இதனை செய்திருக்கிறார் என்று கதிர் கண்டுபிடித்து விடுகிறார். கதிர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஜீவாவை கட்டி அணைத்து கொள்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

பின், ஜீவா கட் அவுட் வைத்திருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் அந்த கட் அவுட்டை பார்த்து வியக்கின்றனர். பின், அனைவரும் போட்டோ எடுத்து கொள்கின்றனர். மறுபுறம் ஐஸ்வர்யாவிற்கு பிரசாந்த் போன் செய்கிறார். அதனை அட்டென்ட் செய்யாமல் இருப்பதை பார்த்து கஸ்தூரி அவரை திட்டுகிறார். பின், பிரசாந்த் கஸ்தூரிக்கு போன் செய்து ஐஸ்வர்யாவிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். இதனால் ஐஸ்வர்யாவிற்கு எரிச்சல் வருகிறது. தனக்கு பிரசாந்தை பிடிக்கவில்லை, கல்யாணம் பண்ண மாட்டேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். இதனால் கஸ்தூரி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here