கதிரை பேட்டி எடுக்க திரளும் பத்திரிக்கையாளர்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோட்!

0
கதிரை பேட்டி எடுக்க திரளும் பத்திரிக்கையாளர்கள் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோட்!
கதிரை பேட்டி எடுக்க திரளும் பத்திரிக்கையாளர்கள் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இன்றைய எபிசோட்!
கதிரை பேட்டி எடுக்க திரளும் பத்திரிக்கையாளர்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிர் நல்ல மதிப்பெண்களுடன் பரிட்சையில் தேர்ச்சி அடைந்து விடுகிறார். கதிரின் படிப்பு திறமை குறித்து அறிந்து வீட்டினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்”

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரை தேடி சிலர் வருகின்றனர். அவர்கள் கதிர் குறித்து மீனாவிடம் வினவுகின்றனர். இதனால் மீனாவிற்கு சந்தேகம் வந்து விடுகிறது. அவர் தனம், கண்ணன் என்று அனைவரிடம் கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பதட்டமடைந்து விடுகின்றனர். பின் மீனா, ஜீவா மற்றும் மூர்த்தியை வீட்டிற்கு வர சொல்லுகிறார். வாசலில் சிலர் நிற்பதை கண்டு வீட்டினர் அனைவரும் பயந்து விடுகின்றனர்.

இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

அப்போது முல்லை மற்றும் கதிர் இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். பின், வந்தவர்கள் கதிர் தனியார் பயிற்சி மையத்தில் 12ம் வகுப்பு படித்து 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கின்றனர். அவரது பரீட்சை எண் குறித்தும் கூறுகின்றனர். அதனை முல்லை சரி பார்க்கிறார். அப்போது தான் அவர்கள் தவறான எண்ணை பார்த்தது அவர்களுக்கு புரிகிறது. இப்படியாக இருக்க, குடும்பத்தினர் அனைவரிடமும் கதிர் படித்ததை பற்றி கூறுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். அதே போல் யாராலும் நம்பவும் முடியவில்லை. மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கதிரை நினைத்து கண் கலங்குகின்றனர். அப்போது குடும்பத்தினர் அனைவரும் பேட்டி கொடுக்க செல்கின்றனர். கதிரிடம் நிருபர்கள் பல கேள்விகளை கேட்கின்றனர். அனைத்திற்கும் கதிர் பொறுமையாக பதிலளிக்கிறார். தனக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற உந்துதல் வருவதற்கு தனது மனைவி தான் காரணம் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here