விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா, பிரசாந்த் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா, பிரசாந்த் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா, பிரசாந்த் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா, பிரசாந்த் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் பல புதுமையான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் “பாரதிதாசன் காலனி” என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்தவர் மற்றும் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் நடிக்க இருக்கின்றனர்.

பாரதிதாசன் காலனி:

குடும்பக் கதைகளை மையமாக வைத்து பல சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பல சீரியல்கள் TRP போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சில சீரியல் கதைகள் முடிவடைந்துள்ள. அதற்கு பதிலாக புதுமையான கதையுடன் பல சீரியல்களை அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை ஒரே குடும்பம் அதில் சில கதாபாத்திரங்கள் அவர்களை சுற்றியே கதை இருந்தது. அதனால் ரசிகர்கள் விரும்பி அந்த சீரியலை பார்த்தார்கள். ஆனால் தற்போது அதில் இருந்து மாறுபட்டு புது கதையுடன் சீரியல் ஒன்று வர இருக்கிறது.

தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் ‘இது’ இருந்தால் மட்டுமே இயங்க அனுமதி – ஆட்சியர் அறிவிப்பு!

“பாரதிதாசன் காலனி” என தொடங்கப்பட்டுள்ள இந்த சீரியலில் பல குடும்பங்கள் தனி தனி கதையுடன் காட்டப்பட இருக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே காலனியில் உறவுகள் போல பழகி வருவது தான் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த கதையில் காதல், திருமண பந்தம், குழந்தைகள் மீது இருக்கும் பாசம் என அனைத்துமே காட்டப்படுகிறது. அதனால் இந்த சீரியல் புது விதமான அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சில வாரங்களுக்கு முன்னதாக இந்த சீரியல் ப்ரோமோ வெளியான நிலையில், இந்த சீரியல் வருகிற ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். குடும்பக் கதை மட்டுமில்லாமல் காதல் கூட இருப்பதால் அனைத்து தரப்பு வயதினரையும் இந்த சீரியல் கவரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து பிரசாந்த் மற்றும் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நடிகை நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here