‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரனுக்கு கிடைத்த விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் குமரனுக்கு கிடைத்த விருது - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் குமரனுக்கு கிடைத்த விருது - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரனுக்கு கிடைத்த விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரனுக்கு 2021ம் ஆண்டின் சிறந்த சின்னத்திரை நடிகருக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் நடிகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் குமரன்

பொதுவாக விஜய் டிவியில் அறிமுகமாகும் எந்தவொரு கலைஞர்களுக்கும் மக்கள் மத்தியில் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதனாலேயே மீடியா துறைக்கு செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் விஜய் டிவியில் ஒருமுறையாவது தலை காட்டி விட வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் விஜய் டிவிக்குள் ஒரு நடன கலைஞராக அறிமுகமாகி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கி இருக்கும் ஒரு முக்கிய நடிகர் குமரன்.

கர்ப்பமாக இருந்து கொண்டு வீடியோ வெளிட்ட “ராஜா ராணி 2” ஆல்யா மானசா – ரசிகர்கள் வாழ்த்து!

நேச்சுரலான நடிப்புக்கு சொந்தக்காரராகிய நடிகர் குமரன், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிர் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். சின்னத்திரை பயணத்தில் இந்த கட்டத்தை அடைவதற்கு முன்பு பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நடிகர் குமரன் வெள்ளித்திரையிலும் ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். இதற்கு மத்தியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் நடிகர் குமரனுக்கு 2021ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ஒன்று கிடைத்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் புதிய தோற்றம் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

அந்த வகையில் தனியாருக்கு சொந்தமான மீடியா நிறுவனத்தில் இருந்து நடிகர் குமரனுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில் இந்த தகவலை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி இருந்தார் நடிகர் குமரன். தொடர்ந்து விருது விழாவில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படங்களை வீடியோக்களாக எடிட் செய்து அவரது ரசிகர்கள் இன்று வரையும் கொண்டாடி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!