‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயல் பாப்பாவை வைத்து மொத்த குடும்பமே அடிக்கும் அரட்டை – வைரலாகும் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கயல் பாப்பாவை வைத்து மொத்த குடும்பமே அடிக்கும் அரட்டை - வைரலாகும் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கயல் பாப்பாவை வைத்து மொத்த குடும்பமே அடிக்கும் அரட்டை - வைரலாகும் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயல் பாப்பாவை வைத்து மொத்த குடும்பமே அடிக்கும் அரட்டை – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் மகளாக கயல் பாப்பா நடித்து வருகிறார். தற்போது கயல் பாப்பாவை வைத்து மொத்த குடும்பமே அரட்டையடிக்கும் படியான வீடியோ சமூக வலைப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல் என்றால் அது நிச்சயமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் தான். அடுத்தடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், அந்த குடும்பங்களை தன் குடும்பமாகவே பலரும் ஏற்றுக்கொண்டு தினமும் சீரியலை கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீரியல் நடிகர்களுமே ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11 வரை ஆன்லைன் வகுப்பு? அரசு திடீர் அறிவிப்பு!

விடுமுறை நாட்களில் கூட நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரெஸ்ட் கிடையாது. காலையில் இருந்து மாலை வரை ஒரே சீரியலில் நடித்து வருவதால் சொந்த குடும்பங்களை விட சீரியல் குடும்பங்களில் தான் அதிக அளவில் பாசங்கள் இருக்கிறது. அவ்வப்போது சீரியல் நடிகர்களும் ஷூட்டில் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக ஹேமா ஷூட்டில் கொடுக்கப்படும் சாப்பாட்டை கூட வீடியோவாக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இவர்கள் மொத்தமாக அடிக்கும் கூத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தற்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவும் அறுவை சிகிச்சை முடிந்து சீரியலில் இணைந்திருக்கிறார். இதற்கிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கயல் பாப்பா பிறந்ததில் இருந்தே நடித்து வருகிறார். தற்போது கயல் பாப்பாவை ஐஸ்வர்யா, கண்ணன், மீனா ஆகியோர் சேர்ந்து குளிப்பாட்டும் படியான வீடியோ ஒன்று யூடியூப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கயல் பாப்பா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிப்பதால் கயலுக்கும் டப்பிங் கொடுக்கணும் போலயே என கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!