கொட்டும் மழையில் ஆடிப்பாடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா, காவ்யா – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் நடிகை காவ்யா மற்றும் சுஜிதா இருவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி உற்சாகமாக நடனமாடுவது போல வெளியாகி இருக்கும் வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சீரியல் நடிகைகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பலதரப்பட்ட மக்களின் விருப்பமான சீரியலாக இருந்து வருகிறது. அதாவது மற்ற சீரியல்களை போல் இல்லாமல், குடும்பத்தில் நடக்கும் எல்லாவித பிரச்சனைகளையும் எவ்வித வன்முறையும் இல்லாமல் நாசூக்காக தீர்த்து வைத்து மக்களிடம் இருந்து கிளாப்ஸ்களை அள்ளி வருகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை போலவே, இதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் மக்களிடையே பிரபலம் தான்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை சித்ராவுடன் இணைந்த ரோஷினி – வைரல் புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இப்படி இருக்க சமீப காலமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் வலைதளங்களில் அதிக ஆர்வம் மிக்கவர்களாக இருந்து வருகின்றனர். அதாவது, புதிதாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பு புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் ஆகியவற்றை எடுத்து அவற்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் குமரனுடன் இணைந்து நடிகை காவ்யா, சுஜிதா இருவரும் சமீபத்தில் ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர்.
கேக் வெட்டி குழந்தையை வரவேற்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரலாகும் வீடியோ!
அதாவது, இவர்கள் மூவரும் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படத்தில் இருந்து ‘உன்னை காணாது’ என்ற பாடலுக்கு அழகாக நடனமாடி ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ எக்கச்சக்க ரசிகர்களால் பார்வையிடப்பட்டிருந்தது. வலைதளங்களிலும் வைரலானது. அதே போல தற்போது கொட்டும் மழையில் நடிகை காவ்யா மற்றும் சுஜிதா செய்துள்ள மற்றுமொரு ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சுஜிதா. இந்த காணொளியும் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.