நிஜ அப்பாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – குவியும் வாழ்த்துக்கள்!

0
நிஜ அப்பாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட
நிஜ அப்பாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கண்ணன் - குவியும் வாழ்த்துக்கள்!
நிஜ அப்பாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையால் பலரின் பாராட்டை பெற்ற சரவண விக்ரம் முதன்முறையாக தனது நிஜ தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சரவண விக்ரம்:

விஜய் டிவியில் கடந்த வார TRPயில் முதலிடத்தை பிடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் சரவண விக்ரம். அந்த சீரியலில் அவர் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை காதலித்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். அதனால் சோகமடைந்த அவரது அம்மா உடல்நிலை சரியில்லாமல் இறந்து விடுகிறார். அம்மா இறந்தது கூட தெரியாமல் கண்ணன் வெளி ஊருக்கு சென்று விட, நீண்ட நேரம் ஆகியும் வராததால் கண்ணன் வருவதற்கு முன்பாக அம்மாவை எரியூட்டி விடுகின்றனர்.

விஜய் டிவி பிரபல சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – பிக்பாஸ் சீசன் 5 எதிரொலி!

பின் வந்த கண்ணன் அம்மா போஸ்டரை பார்த்து கிழித்து விடுகிறார். அம்மா இறந்த செய்தியை ஐஸ்வர்யா சொல்ல, அங்கிருந்து அழுது கொண்டே ஓடியது, அம்மா உடல் எரியூட்டப்பட்டதை பார்த்து கதறி அழுதது போன்ற சீன்களில் அருமையாக நடித்து TRP அதிகரிக்க இவரே காரணமாக இருந்தார். கடந்த வார TRP ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. பின் கடைசி வரை அம்மாவை பார்க்காத குற்ற உணர்ச்சியில் இருந்ததால் அம்மாவிற்காக மொட்டை அடித்து காரியம் செய்கிறார்.

மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டிற்கு வரும் லட்சுமி அம்மா – அதிர்ந்து போகும் தனம்!!

மேலும் கண்ணன் இந்த சீரியலுக்காக மொட்டை அடித்தது அனைவரின் பாராட்டை பெற்றது. இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் சரவணன் விக்ரம், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவு செய்வார். சமீபத்தில் அவர் அம்மா தங்கை உடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதன் பின்னர் தற்போது தனது தந்தையுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களில் ஒரு நல்ல நடிகரை புள்ளையாக பெற்றிருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!