தனது தங்கைக்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – வைரலாகும் வீடியோ!

0
தனது தங்கைக்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - வைரலாகும் வீடியோ!
தனது தங்கைக்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - வைரலாகும் வீடியோ!
தனது தங்கைக்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் தங்கை நிச்சயதார்த்தம் கடந்த வாரத்தில் நடைபெற்றது. தற்போது தனது தங்கைக்கு கண்ணன் ஒரு அன்பு பரிசை கொடுக்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ணன் கொடுத்த பரிசு:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையும் கதிரும் வீட்டை விட்டு சென்று விட்டார்கள். இதற்குப் பிறகு முல்லையையும் கதிரையும் சமாதானப்படுத்தி குடும்பத்தினர்கள் வீட்டிற்கு அழைத்து வருவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியல்களில் மட்டும்தான் முல்லை, கதிர், ஜீவா, மூர்த்தி என அனைவரும் அண்ணன் அண்ணியாக பழகாமல் நிஜ வாழ்க்கையிலும் தனது சொந்தங்களை போலத்தான் பழகி கொண்டிருக்கின்றனர்.

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் வீட்டில் ஏதேனும் விசேஷங்கள் என்றாலும் கூட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருமே ஒற்றுமையாக கலந்து கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரமின் தங்கையின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். தங்கையின் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் கண்ணன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது தனது தங்கைக்கு கண்ணன் பரிசு கொடுக்கும் படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனை நாட்களாக கூடவே இருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த தங்கை திருமணம் நடந்த பிறகு தன்னை விட்டு பிரிந்து விடுவார் என்கிற வருத்தத்தில் தங்கையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிரேம் போட்டு தங்கைக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார். என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்கை ஆகிவிட்டோம் என்கிற வரிகளுக்குள் பல வேதனைகளை மறைத்துக் கொண்டு தனது தங்கைக்கு கண்ணன் கொடுத்த பரிசை பார்த்து கண்ணனின் தங்கை கண்கலங்கி உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here