‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர், நடிகைகளின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்படும் ரீல்ஸ்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சரவண விக்ரம், விஜே தீபிகா உடன் இணைந்து செய்துள்ள ரீல்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் வைரல்:

தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருப்பது இன்ஸ்டாகிராம் செயலி தான். வெள்ளித்திரை பிரபலங்கள் முதல் அனைவரும் இன்ஸ்டா பக்கத்தில் தனியாக கணக்குகளை வைத்துள்ளனர். பிரபலங்களின் ரசிகர்கள் இவர்களை பின்தொடர்ந்து அவர்களை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களை அறிந்து கொள்கின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரீல்ஸ் வீடியோ எடுக்கும் வசதி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளது. பிரபலங்கள் அவ்வப்போது தங்களது ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகர் கமல்ஹாசன் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

அந்த வகையில் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனாக நடிக்கும் சரவணவிக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா. இவர்கள் இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்று அங்குள்ள வீடியோக்கள் மற்றும் போடோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் எங்கு சென்றாலும், எதை செய்தாலும் ஜோடியாக செய்து வருவதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்று முடிவே செய்து விட்டனர். அதிலும், இவர்கள் என்ன போட்டோ மற்றும் வீடியோ போட்டாலும் இருவரும் ஒரே கலரில் தான் உடை அணிந்து உள்ளனர்.

அடம் பிடிக்கும் பாரதியை தன் வழிக்கு கொண்டு வரும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இது ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் Couple போட்டோஷூட் நடத்தி உள்ளதாக தீபிகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக அதில், குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சரவணவிக்ரம் மற்றும் விஜே தீபிகா ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டுள்ளனர். அந்த ரீல்ஸ் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here