‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யாவின் Couple போட்டோஷூட் – அதிர்ந்து போன ரசிகர்கள்!!
தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களின் ஒவ்வொரு சின்ன சின்ன வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகிகொண்டிருக்கிறது. இந்நிலையில், சரவணவிக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரின் வீடியோ ஒன்று புதிதாக பரவி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்:
திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையை சேர்ந்த பல நட்சத்திரங்களுக்கும் தற்சமயங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இவர்களும் ரசிகர்களை மகிழ்விக்க பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டா பக்கங்களில் அடிக்கடி இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை குஷியாக்கி விடுகிறது. சமீப காலமாக சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் மற்றும் விஜே தீபிகா இருவரும் உள்ளனர்.
தமிழகத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!
இவர்கள் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாகத்தான் நண்பர்களாக அறிமுகம் ஆனார்கள். அதன்பிறகு, ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விஜே தீபிகா விலக்கப்பட்டார். அதன் பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்து வளர்ந்து வந்தது. இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும், பல இடங்களுக்கும் சென்று அங்கிருந்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் ஆபீஸ் ரூம் டூர் சமீபத்தில் மிகவும் வைரலாக பரவியது.
“முத்ரா யோஜனா” திட்டம் மூலம் ரூ.50,000 வரை கடன் – முழு விபரம் இதோ!
இவர்கள் சேர்ந்தே அனைத்து விஷயங்களையும் செய்து வருவதால் சரவணவிக்ரம் மற்றும் தீபிகா இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இணைந்து கப்புள் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது தீபிகாவின் இன்ஸ்டாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஜில்லா படத்தின் பாடலுக்கு இருவரும் நடித்துள்ளனர். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.