விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெங்கட் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவா வெங்கட் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவா வெங்கட் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா வெங்கட் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெங்கட். அவர் முதன்முறையாக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளுடன் கலந்து கொள்ள இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதை சென்று கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் அண்ணன், தம்பிகள் 4 பேர் இருக்கின்றனர். மூத்த அண்ணன் பேச்சை கேட்கும் 3 தம்பிகள் அதில் முதல் தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். வெங்கட் என்று இவரை சொல்வது விட ஜீவா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.

‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரீ இவர் தான்? இணையத்தில் கசிந்த தகவல்!

இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல முன்னணி சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் சன் டிவி ரோஜா சீரியலில் ஹீரோ அர்ஜுனின் தம்பியாக அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – பக்தர்கள் வருகைக்கான தடை நீக்கம்!

இந்நிலையில் அவர் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளுடன் முதன்முதலில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் பெயர் “சூப்பர் டாடி” என வைக்கப்பட்டுள்ளது.  அதில் சிறந்த தந்தையாக தன்னை நிரூபிக்க அவர் இருக்கிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுகிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here