‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு ரசிகரின் நெகிழ்ச்சியான கேள்வி – வெங்கட்டின் பதில்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவிற்கு ரசிகரின் நெகிழ்ச்சியான கேள்வி - வெங்கட்டின் பதில்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவிற்கு ரசிகரின் நெகிழ்ச்சியான கேள்வி – வெங்கட்டின் பதில்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வெங்கட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா:

சின்னத்திரையில் நடிகர், நடிகைகள் தங்கள் நிஜ பெயரை விட தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயரில் தான் அதிகம் அழைக்கப்படுகின்றனர். அந்த அளவிற்கு சீரியல் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் பதிந்து விடுகிறது. நடிகர்கள் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீரியல்களை இதனால் தான் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைவரின் திறமையும் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இவர்களில் ஜீவா – மீனா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அண்ணன்களுடன் சேர்ந்த கண்ணன் – வெளியான ப்ரோமோ!

இவர்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காதலித்து திருமணம் செய்த முதல் ஜோடி, ஆனால் எப்போது எலியும், பூனையுமாக இருவரும் சண்டையிட்டு கொள்வார்கள். ரசிக்கும் படியான இவர்களின் சண்டை காட்சிகள் தான் அதிக ரசிகர்களை இவர்களுக்கு பெற்று தந்துள்ளது. இந்நிலையில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஒரு மலையாள ரசிகர் வெங்கட் சிறப்பாக நடிப்பதாகவும், அவரை மிகவும் பிடிக்கும் என்றும் அந்த பதிவில் மலையாளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

‘உங்களால் தான் நான் மீண்டு வந்தேன்’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த கமல் – வெளியான மாஸ் ப்ரோமோ!

இதற்கு பதில் அளித்த வெங்கட் நீங்கள் மலையாளத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று கூட தெரியவில்லை. ஒரு மலையாள நண்பர் மூலமாக தான் நீங்கள் சொல்லியிருப்பதை புரிந்து கொண்டேன் என்றும், உங்கள் அன்புக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்த வெங்கட்டின் ரசிகர்கள் அவரின் பதிலை பார்த்து நெகிழ்ந்து விட்டனர். மேலும் இதேபோல், உங்கள் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று நினைக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கட் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here