குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வேடத்தில் நடித்து வரும் ஹேமா குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடியதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹேமாவின் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் கொண்டாட்டம்:
சின்னத்திரை நடிகர், நடிகைகள் அனைவரும் தற்போது வெள்ளித்திரை நடிகர்கள் அளவிற்கு அதிக ரசிகர்களை பெற்றுள்ளனர். இதற்கு சீரியலில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும் முக்கிய காரணமாக உள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரமாக நடிக்கும் நடிகை ஹேமா ராஜ் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவரது துறுதுறுப்பான நடிப்பிற்கு எப்போதும் அதிக அளவில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து லட்சங்களை அள்ளிச்சென்ற ப்ரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
ஹேமா முதன்முதலில் விஜய் டிவியின் ஆபீஸ் சீரியலில் தான் அறிமுகம் ஆனார். இவர் செய்தி வாசிப்பும் செய்து வந்துள்ளார். இது தவிர ஜீ தமிழ் சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது நிஜ பிரசவ காலத்தின் போது சீரியலிலும் இவர் கர்ப்பமாக இருப்பது போல் கதையை கொண்டு வந்து இவருக்கு பிரசவ கால ஓய்வை அளித்தனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் வரும் காட்சிகள் என்றாலே கலகலப்பு தான். ஹேமா தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில், அவ்வப்போது பல தரப்பிலான வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது பொங்கல் பண்டிகையை ஹேமா தனது குடும்பத்தினருடன் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், தனது மகன் சாத்விக்கிற்கு வேட்டி, சட்டை அணிவித்து இருந்தார். அந்த சுட்டி குழந்தை இங்கும், அங்கும் ஓடியதை பார்த்த ரசிகர்கள் இந்த குடும்பத்திற்கு பொங்கல் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.