விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா யார் தெரியுமா? சின்னத்திரையில் சாதித்த கதை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமாவை பற்றிய குடும்ப தகவல்கள், அவரின் சொந்த விவரங்கள் போன்றவை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் ரசிகர்களுக்கு இந்த தகவல்கள் விருந்தாக அமைய போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா:
விஜய் டிவியின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆன நடிகை ஹேமா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக தற்போது மக்கள் மத்தியில் நல்ல புகழை அடைந்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் தற்போது மீனாவாகவே அழைக்கப்படுகிறார். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராகவும் தான் பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு, விஜய் டிவியின் மெகா ஹிட் ஆன ஆபீஸ் சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். இதன் மூலம் மக்களின் கவனத்தை பெற்றிருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் இவரின் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் சுஜிதாவின் ஸ்கூல் விசிட் – வைரலாகும் வீடியோ!
இவரின் சொந்த பெயர் ஹேமலதா. இவரின் அப்பா பெயர் ராஜ்குமார். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர். அனைவரும் ஹேமா என்றே அழைக்கின்றனர். இவர் 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பிறந்துள்ளார். தற்போது 30 வயதாகியுள்ள ஹேமா நடிப்பின் காரணமாக தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். நடிகை, தொகுப்பாளர், மாடல் என்ற பன்முகத்திறமையை கொண்டவர். ஆபீஸ் நாடகத்தின் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.ஹேமாவின் அம்மா பெயர் அமுதா. ஹேமாவிற்கு திருமணம் ஆகிவிட்டது.
நடிகர் ஆர்யனுக்கு சர்பிரைஸ் கொடுத்த ‘செம்பருத்தி’ ஷபானா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஹேமாவின் கணவர் பெயர் சதீஸ். இவருக்கு தற்போது 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஹேமாவின் தாய்மொழி தமிழ் தான். இவர் மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு, கல்லூரி படிப்பை AVC கல்லூரியில் முடித்துள்ளார். MCA முடித்துள்ள ஹேமா 5 அடி 3 அங்குல உயரம் கொண்டவர். மேலும், 51 கிலோ எடையில் உள்ளார். இவர் சராசரியாக மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு சராசரியான 20 முதல் 60 லட்சம் வரை இருக்கும். இவர் சுத்த சைவ உணவுகளை மட்டுமே உண்பாராம்.