ரசிகர் கேள்விக்கு பதிலடி கொடுத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – வைரலாகும் செய்தி!

0
ரசிகர் கேள்விக்கு பதிலடி கொடுத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வைரலாகும் செய்தி!
ரசிகர் கேள்விக்கு பதிலடி கொடுத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வைரலாகும் செய்தி!
ரசிகர் கேள்விக்கு பதிலடி கொடுத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – வைரலாகும் செய்தி!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் மூலமாக புகழ் பெற்ற நடிகை ஹேமா தனக்கு சமைக்க தெரியாத என்று கேட்ட தனது ரசிகர்களுக்கு தக்காளியை வைத்து ஒரு ரெசிபி செய்து அசத்தியிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

நடிகை ஹேமா

மக்கள் இன்றைய காலகட்டத்தில் சீரியல் நடிகைகளை தான் அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் தனது நடிப்பின் காரணமாக தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தினை கொண்டவர் தான், நடிகை ஹேமா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹேமா. சீரியலில் அவ்வப்போது வில்லித்தனமாக நடந்து கொண்டாலும், கடுமையான சமயங்களில் மீனா நல்லவர் போல காட்டப்படுவார். இதனாலேயே இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

5 முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி – பைசர் நிறுவனம் அறிவிப்பு!

நடிகை ஹேமா தனது சீரியல் ஷூட்டிங், அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் தனது யூடியூப் சேனலில் விடீயோக்களை பதிவேற்றுவது என்று படுபிஸியாக இருக்கிறார். இவரது யூடியூப் சேனலில் சமையல் தவிர்த்து அனைத்து விதமாக விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் தனது மகனது பிறந்தநாள் அன்று கொண்டாடிய விடீயோக்களை பதிவிட்டு இருந்தார். இப்படியாக இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் லைவ் ஒன்று செய்திருந்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு முக்கிய அறிவிப்பு – அமெரிக்க அரசு!

அதில் பலர் அவரை நீங்கள் உங்களது யூடியூப் சேனலில் ஏன் சமையல் விடீயோக்களை பதிவிடுவதில்லை? என்று கேள்வி எழுப்பினர். இதனை கேட்டு விட்டு பொங்கி எழுந்த நடிகை ஹேமா தனக்கு நன்றாக சமைக்க தெரியும் என்பதனை நிரூபிக்க தக்காளியை வைத்து ஊறுகாய் செய்து அசத்தியுள்ளார். அதனை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். அவரது ஸ்பெஷல் ரெசிபியை பார்த்து விட்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!