‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுக்கு புது ஜோடி – ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா புதிய கேரக்டரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப கதை களத்தில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 3 அண்ணன்கள், ஒரு தம்பி என்று பாசம் நிறைந்த குடும்பமாக மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. வீட்டின் மூத்த மருமகளாக வரும் தனம் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் உணர்ச்சி வசமாக அமைகிறது. இந்த நிலையில் திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு சீரியலில் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் வீட்டின் கடைசி தம்பியான கண்ணன் ஐஸ்வர்யாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
லட்சுமி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இருவரையும் குடும்பத்தினர் ஏற்கவில்லை வீடு இன்றியும், செலவிற்கு பணம் இன்றியும் அலைகின்றனர். இந்த நேரத்தில் தெரிந்தவர் மூலம் வீடு ஒன்று கிடைக்கிறது. பின்னர் ஐஸ்வர்யாவும், கண்ணனும் வாழ்க்கையை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா மாற்றப்பட்டு ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் நடிகை சாய் காயத்ரி கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் – முதல்வர் ஆலோசனை!
இந்த மாற்றம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலித்தது நடிகை வைஷாலியை, கல்யாணம் செய்து கொண்டது விஜே தீபிகாவை ஆனால் வாழப்போவது சாய் காயத்ரியுடன் இது நியாயமா கண்ணா? என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். விஜே தீபிகா தான் கண்ணனுக்கு பொருத்தமாக இருப்பதாகவும் நடிகை சாய் காயத்ரி கண்ணனை விட வயது மூத்தவர் போல இருப்பதாகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.