“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா மகன் பிறந்தநாள் விழாவில் சீரியல் பிரபலங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" மீனா மகன் பிறந்தநாள் விழாவில் சீரியல் பிரபலங்கள் - ரசிகர்கள் வாழ்த்து!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா மகன் பிறந்தநாள் விழாவில் சீரியல் பிரபலங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமாவின் மகன் சாத்விக் முதல் பிறந்தநாள் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் பங்கேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸில் மூர்த்தியின் முதல் தம்பி ஜீவாவின் மனைவியாக நடித்து வருபவர் நடிகை ஹேமா. அவர் ஹேமா டைரி என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் குழந்தை வளர்ப்பு பற்றியும், ஷூட்டிங் ஸ்பாட் லூட்டிகள், குழந்தைக்கு ஷூட்டிங் சென்ற பின்னரும் பால் கொடுப்பது எப்படி என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதில் தனது மகனின் புகைப்படத்தை காட்டவே இல்லை என அதிகம் பேர் கமெண்ட் செய்தனர்.

சந்தியா, சரவணனின் காதல் காட்சிகளுடன் “ராஜா ராணி 2” ப்ரோமோ – விஜய் டிவி ரிலீஸ்!

என் வீட்டில் இருப்பவர்கள் அனுமதித்தால் நான் புகைப்படத்தை வெளியிடுவேன் என அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார். அதன் பின்னர் தனது மகன் சாத்விக் பிறந்தநாள் அன்று புகைப்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று தனது யூடுப் சேனலில் வெளியிட்டார். அதில் ஊதா நிற காரில் சாத்விக் வந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மூர்த்தியை எதிர்க்கும் கண்ணன், தனி ஆளாக அம்மாவிற்கு இறுதி சடங்கு – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அவர்கள் சாத்விக் வயிற்றில் இருக்கும் போதிலிருந்து நாங்கள் அவரை பார்க்கிறோம். பெரிய வயிறை வைத்துக் கொண்டு அவர் கஷ்டப்பட்டு நடித்தார் என புகழ்ந்து கூறியுள்ளனர். மேலும் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஜீவா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!