“பாண்டியன் ஸ்டார்ஸ்” நடிகை மீனா பதிவிட்ட மகனின் புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹேமா. அவருக்கு சீரியலில் போல நிஜத்திலும் குழந்தை பிறந்துள்ள நிலையில், முதன்முதலில் தன்னுடைய மகன் பிறந்தநாள் அன்று மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஹேமா:
விஜய் டிவியில் பல பிரபலமான பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கூட்டு குடும்ப பாசத்தை சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அந்த சீரியலில் மீனா கதாபாத்திரம் முதலில் மாசமாக இருந்தார். அதன் பின்னர் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் வலி வருவது போல காட்டப்பட்டு, 1 மாதம் சீரியலில் இருந்து மறைமுகமாக வைக்கப்பட்டு பின் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அப்போது நிஜ வாழ்க்கையிலும் மாசமாக இருந்ததாகவும், நிஜத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்லப்பட்டது.
சந்தியாவை வீட்டிற்கு அழைத்து வரும் சரவணன், சிவகாமி ஏற்றுக் கொள்வாரா? “ராஜா ராணி 2” ப்ரோமோ!
அந்த சீரியலில், அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், நிஜத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் மகன் முதல் பிறந்த நாள் குறித்த அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இன்று முதன் முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் ஹேமா டைரி என யூடுப் சேனல் நடத்தி வரும் நிலையில், அதில் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு விதவிதமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். செம கியூட்டாக ஹேமா மகன் சாத்விக் இருக்கிறார் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இப்போது தான் பிறந்த மாதிரி இருக்கிறது. அதற்குள் 1 வயது ஆகிவிட்டது என மகிழ்ச்சியில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.