“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனாவின் எல்லைமீறிய போட்டோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் மீனாவின் எல்லைமீறிய போட்டோஷூட் - கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனாவின் எல்லைமீறிய போட்டோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. எப்போதும் ஹோம்லியாக இருக்கும் அவர் தற்போது மாடல் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் ரசிகர்கள் கமெண்ட்களில் கழுவி ஊற்றி இருக்கின்றனர்.

நடிகை ஹேமா:

விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், வாரந்தோறும் TRPயில் டாப் 2 இடங்களில் ஒன்றை பிடிக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தின் பாசத்தை உணர்த்துகிறது. அண்ணன் தம்பிகள் என 4 பேர் இருக்க, கடைசி தம்பி காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பினாலும் அண்ணன், தம்பி பாசம் கோவத்தை மீறி செல்கிறது. தம்பிகளுக்காக 15 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர் மூர்த்தி, தனம் தம்பதியினர்.

ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றியாளர் இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

அவர்களுக்கு தற்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் 2வது அண்ணன் ஜீவாவிற்கு மனைவியாக மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஹேமா. அவர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார். மேலும் அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்துகிறார். அந்த சேனலில் சமீபத்தில் அவர் மகன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வீடியோ பதிவிட்டார். தொடர்ந்து குடும்ப பாங்காக இருக்கும் அவருக்கு ரசிகர்கள் பல உண்டு.

விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் அவர் தற்போது மாடல் உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் சேலை அணிந்து பின் லெக்கின்ஸ் போட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது? என கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களுக்கு சேலை தான் நன்றாக இருக்கிறது. மாடல் உடை நன்றாகவே இல்லை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!