சினிமாவில் வில்லியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – எந்த திரைப்படம் தெரியுமா?

0
சினிமாவில் வில்லியான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - எந்த திரைப்படம் தெரியுமா?
சினிமாவில் வில்லியான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா - எந்த திரைப்படம் தெரியுமா?
சினிமாவில் வில்லியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – எந்த திரைப்படம் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை ஹேமா தமிழ் திரைப்படம் ஒன்றில் மோசமான வில்லியாக நடித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் அதிரவைப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வில்லியான நடிகை

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது 600 க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நடித்து வரும் 3 முக்கியமான கதாநாயகிகளில் ஒருவர் மீனா என்ற ஹேமா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, ஒரு சாதாரண, சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் பாராட்டு!

ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டும் என்ற கனவோடு கேமராவுக்கு முன்னால் தோன்றிய இவரை சீரியல் தொடர்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதிலும் ஹேமாவை மக்கள் மத்தியில் பிரபலமாகிய பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே உரித்தானது. இந்த சீரியலில் ஆரம்பகால கட்டத்தில் சற்று வில்லத்தனம் காட்டி வந்த ஹேமா, நாட்கள் செல்ல செல்ல ஒரு காமெடி கதாபாத்திரமாக மாறினார். இதன் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் இடமும் பிடித்தார்.

உண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஹேமா நடித்து வரும் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட இவருக்கு கிடைத்த வரவேற்புகளும், ரசிகர்களும் ஏராளம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஹேமா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் முன்னதாகவே சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததுண்டு.

TN Job “FB  Group” Join Now

பொதுவாக ஹோம்லியான கதாபாத்திரங்களில் ஹேமாவை பார்த்துள்ள ரசிகர்கள் ஆச்சரியப்படும் விதமாக ‘ஆறாவது சினம்’ படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் இவர். அதாவது பெண்ணால் ஏமாற்றப்படும் ஒருவர் சைக்கோவாக மாறி அந்த பெண்ணின் கணவனை கொன்று பழி தீர்த்து கொள்வதே அந்த படத்தின் திரைக்கதையாகும். இதில் ஹேமா கல்லூரி படிக்கும் 5 பெண்களில் ஒருவராக, கல்லூரி ஆசிரியரை ஏமாற்றும் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். ஹேமா நடித்துள்ள இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!