விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி. தற்போது டாக்டர் பட டயலாக் ஒன்றை ரீல்ஸ் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐசு:

குடும்ப வாழ்க்கையில் அண்ணன், தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிய கதை கொண்டது விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல். இந்த சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்திக்கு மூன்று தம்பிகள் இருக்கின்றனர். தம்பிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க கடைசி தம்பி காதலால் வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். அவர் தனத்தின் அண்ணி மகள் ஐஸ்வர்யாவை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்கிறார். மேலும் தனியாக அவர் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்துகிறார்.

விமர்சனங்களை தாண்டி வெற்றியின் உச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ஃபரினா – நம்பிக்கையின் நாயகி!

இந்நிலையில் கடைசி தம்பி கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார். அதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். மதுரை பெண்ணான சாய் காயத்ரி படிப்பதற்காக சென்னைக்கு வந்தார். இவர் சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். படிக்கும் போதே அவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அவர் மாடலிங் செய்து வந்தார்.

வயதான பாட்டி போல மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் கல்லூரி படிக்கும் போதே அவர் விஜே, ஆர்ஜே, ஆங்கர் என பல திறமைகளை கொண்டுள்ளார். 2011ல் விஜய் டிவியின் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அவர் நடிக்க தொடங்கினார். தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பது அவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் இன்ஸ்டாவில் பல ரீல்ஸ் வீடியோக்களை செய்து வருகிறார். தற்போது அவர் டாக்டர் பட டயலாக் பேசி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!