மீண்டும் பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இன்ஸ்டா வீடியோ!

0
மீண்டும் பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - இன்ஸ்டா வீடியோ!
மீண்டும் பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - இன்ஸ்டா வீடியோ!
மீண்டும் பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இன்ஸ்டா வீடியோ!

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் மூலம் பிரபலமான சரவணன் மற்றும் விஜே தீபிகா ஜோடி தற்போது வா மச்சானே பாடலுக்கு நடு ரோட்டில் நின்று குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தற்போது சில முக்கிய திருப்பங்களுடன் வெளியாகி வருகிறது. இந்த சீரியலில் உள்ள அனைத்து ஜோடிகளிலும் சமீபத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு முக்கியமான ஜோடி என்றால் அது கண்ணன் – ஐஸ்வர்யா தான். இந்த கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்புகளை கொடுத்து வந்தனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த ஜோடி சீரியலில் இருந்து திடீரென பிரிந்தது. இந்த பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்கள் இன்று வரையும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். ஆனால் விஜே தீபிகா சீரியலை விட்டு விலகினாலும், இந்த ஜோடி யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சில சிறப்பு வீடியோ காட்சிகளில் நடித்து அதனை வெளியிட்டு வருகின்றனர்.

நாகசைதன்யா, சமந்தா திருமண வாழ்க்கை முறிவு – கூட்டாக விவாகரத்து அறிவிப்பு!

அதனால் சீரியலில் இந்த ஜோடியை மிஸ் செய்து வந்த ரசிகர்கள் சிறப்பு வீடியோ காட்சிகளுக்கு தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் இணைந்து வா மச்சானே பாடலுக்கு நடு ரோட்டில் நின்று நடனமாடியுள்ளனர். அதாவது ஆட்டோ ஓட்டுபவர்களின் உடையணிந்து தெருவில் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக அந்த காணொளியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!