பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா, விஜய் டிவி நட்சத்திரங்களுடன் – வெளியான ப்ரோமோ!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா, விஜய் டிவி நட்சத்திரங்களுடன் - வெளியான ப்ரோமோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா, விஜய் டிவி நட்சத்திரங்களுடன் - வெளியான ப்ரோமோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா, விஜய் டிவி நட்சத்திரங்களுடன் – வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவர் மத்தியிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் கூட்டு குடும்ப வாழ்க்கை மற்றும் உறவுகளின் அன்பு அழகாக எடுத்து காட்டப்பட்டு வருவதால் அனைத்து தரப்பினருக்கும் இந்த சீரியல் மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூட சொல்லலாம். இதில் மூத்த மருமகளாக இருக்கும் தனம் கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

தமிழக அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – எச்சரிக்கை அறிவிப்பு!

இந்த சீரியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சி, தனத்தின் வளைகாப்பு. அதனால் அந்த எபிசோட் கோலாகலமாக காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தற்போதைய “சூப்பர் சிங்கர்” போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

நாளை ஒளிபரப்பாக இருக்கும் காட்சி கோலாகலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தாய்மை வாழ்கவென தூய செந்தமிழ்” என்று பாட்டு பாடி தனத்தினை அலங்கரித்து அழைத்து வருகின்றனர். அவருக்கு தாய்மைக்கே உரிய வகையில் அழகாக வளையல்களை அணிவித்து மகிழ்கின்றனர். கடைசியில், சிறப்பு விருந்தினராக செஃப் தாமு நிகழ்ச்சிக்கு வருகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here