‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை திறந்த கண்ணன், விஷயத்தை அறிந்து கடும் கோபத்தில் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கடையை திறந்த கண்ணன், விஷயத்தை அறிந்து கடும் கோபத்தில் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கடையை திறந்த கண்ணன், விஷயத்தை அறிந்து கடும் கோபத்தில் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை திறந்த கண்ணன், விஷயத்தை அறிந்து கடும் கோபத்தில் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி குடும்பத்தினர் சென்னைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அதை பார்த்த கண்ணன் கடையை திறந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என பயத்தில் நிற்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், சென்னையில் இருந்து அனைவரும் வீடு திரும்ப கண்ணன் வாசலில் நின்று மூர்த்தி வீட்டு வாசலை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது ஐஸ்வர்யா வந்து என்ன பார்க்கிறாய் என கேட்க, அண்ணனிற்கு நான் செய்தது தெரிந்தால் என்ன ஆகும் என கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா நீ ஒன்னும் தப்பு செய்யவில்லையே அப்பறம் ஏன் பயப்படுகிறாய் என ஆறுதல் சொல்கிறார். பின் முல்லை கதிர் குளித்துவிட்டு வர தலையை துவட்டி விடுகிறார். பின் கதிர் கடைக்கு கிளம்ப முல்லை இன்று வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்கலாம் என கேட்கிறார்.

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த சஞ்சீவ், நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா? அவர் சொன்ன பதில் இதுதான்!

ஆனால் கதிர் நான்கு நாட்களாக கடை திறக்காமல் இருந்தால் சரியா வராது என சொல்லி கதிர் கிளம்புகிறார். அப்போது முல்லை வருத்தப்பட இரவு வந்து பேசுகிறேன் என சொல்கிறார். மீனா ஏசி வேண்டும் என சொல்ல, சென்னை சென்று எங்கேயும் போகாமல் வீட்டிற்கு வந்திருக்கோம் என புலம்பிக் கொண்டிருக்கார். பின் அப்பாவிடம் என்ன சொல்வது என கேட்டு பேசாமல் நீ நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை காட்டு என சொல்கிறார். அப்போது தான் அவர் எதுவும் சொல்லமுடியாது என சொல்கிறார். 4 நாட்கள் கடையை திறக்கவில்லை அதனால் நீ இப்போது சென்றால் உன்னை பிடிக்க முடியாது இப்பவே அப்பா அம்மாவை பார்த்துவிடுவோம் என சொல்ல, ஜீவா சரி என சொல்கிறார்.

தனம் அனைவருக்கும் டீ போட்டுக் கொடுக்க, மூர்த்தி நம்ம ஊர் தான் நன்றாக இருக்கிறது என தனத்திடம் சொல்ல, என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம வீடு போல வராது என சொல்கிறார். கதிர் முல்லையும் அதையே சொல்கிறார்கள். பின் மூர்த்தி கடைக்கு கிளம்புவோம் என சொல்ல, கதிருக்கு போன் வருகிறது. நம்ம வாடிக்கையாளர் தான் 5 நாட்கள் வெளியே பொருள்கள் வாங்க சொன்னேன் என கதிர் பேச, அவர் நம்ம கடையில் இருந்து பொருள்கள் வந்தது. அதில் மிளகாய் வரவில்லை என சொல்கிறார். அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார். யாரு கடையில் இருந்து அனுப்பினால் என கேட்க உங்க தம்பி கண்ணன் தான் என சொல்கிறார்.

அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைய அந்த வாடிக்கையாளர் நடந்ததை சொல்கிறார். பின் மூர்த்தி யாரு கடையை திறந்திருப்பார் என தெரியாமல் இருக்க, அந்த சரவணன் தான் கடையை திறந்திருப்பார் என கோபப்படுகிறார். அப்போது சரவணன் அங்கே வந்து கண்ணன் தான் கடையை திறந்தான், குலுக்கல் முறையில் பரிசு எல்லாம் குடுத்தான். 3 நாட்கள் சரியான கூட்டம் என சொல்ல, அவனுக்கு சாவி எப்படி கிடைத்தது என மூர்த்தி கேட்கிறார். வீட்டிற்கு உள்ளே குதித்து சாவி எடுத்ததாக சொல்ல மூர்த்தி என்ன நடந்தது என பொறுமையாக கேட்போம் என சொல்கிறார்.

அவனுக்கு கடையை பற்றி என்ன தெரியும், வாடிக்கையாளரை பிடிக்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருப்போம் என மூர்த்தி கோவத்தில் இருக்க, கூப்பிட்டு கேட்போம் என தனம் சொல்கிறார். நீ கூப்பிட்டு கேட்ப, அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறாய். எல்லாம் நீ கொடுத்த இடம் தான் என மூர்த்தி சொல்லி கண்ணனுடன் சண்டை போட செல்கிறார். கண்ணன் வீட்டு வாசலில் நின்று வெளியே வா என கத்த, அக்கம்பக்கத்தினர் நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லைக்கு நாளை பிறந்தநாள் – CDP ரிலீஸ்! ரசிகர்கள் வாழ்த்து!

அப்போது தனம் என்ன கதிர் இப்படி கத்துகிறார் என கேட்க கண்ணன் வெளியே வருகிறார். எல்லாரும் பார்க்கிறார்கள். எதுவாக இருந்தாலும் உள்ளே சென்று பேசலாம் என தனம் சொல்ல, கண்ணனை மூர்த்தி வீட்டிற்குள் வர சொல்கிறார். நீ மட்டும் வா என சொல்ல ஐஸ்வர்யா வெளியே நிற்கிறார். தனம் என்ன இதெல்லாம் என கேட்க, கதிர் கடை பையனை கடைக்கு போக சொல்கிறார். பின் கண்ணன் உள்ளே செல்ல, மூர்த்தி கோவமாக கண்ணனை பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!