தமிழ் புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

0
தமிழ் புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - வைரலாகும் வீடியோ!
தமிழ் புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தற்போது அவரது குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை யூடியூப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் சீரியல் என்றால் அது கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். ஒவ்வொரு கூட்டு குடும்ப வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அப்படியே மக்களிடம் பிரதிபலிப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரினை விரும்பி பார்த்து வருகின்றனர். பெரும்பாலும் இந்த சீரியலை விட சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அதிகமான ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் சுஜிதா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்திக்கு மனைவியாக, கதிர், ஜீவா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு மூத்த அண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளை விட சுஜிதா தான் அதிகமாக சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். இவர் சீரியலில் நடித்தது போக மீதி நேரம் முழுவதையும் சமூக வலைதளங்களில் செலவிட்டு வருகிறார்.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்களுக்கு புதிய கல்வி விதிகள்!

அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பார். அதுமட்டுமில்லாமல் கதை கேளு கதை கேளு என்னும் யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து திறம்பட நடத்தி வருகிறார். அவ்வப்போது அவரது யூடியூப் பக்கத்தில் மக்களுக்கு தேவையான சில கருத்துகள், ஷூட்டிங்கில் இவர்கள் அடித்த அரட்டைகள் என அனைத்தையும் பதிவு செய்தபடி இருப்பார். தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் செய்த பலகாரங்கள், பூஜைகள் என அனைத்தையும் யூடியூப் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here