பாக்கியா வீட்டிற்கு வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், கடுப்பில் கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
பாக்கியா வீட்டிற்கு வந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம், கடுப்பில் கோபி - இன்றைய
பாக்கியா வீட்டிற்கு வந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம், கடுப்பில் கோபி - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
பாக்கியா வீட்டிற்கு வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், கடுப்பில் கோபி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் வந்தது தெரிந்து கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது. அதனால் அவர் பாக்கியாவிடம் சத்தம் போடுகிறார்.

மகா சங்கமம்:

இன்று மகா சங்கமத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். காரில் வருவது அலுப்பாக இருக்கிறது அடுத்த முறை ட்ரெயின் டிக்கெட் போட வேண்டும் என சொல்ல விமானத்தில் போகலாம் என பேசிக் கொள்கின்றனர். அப்போது டிக்கெட் விலையை கேட்டு மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். பின் அனைவரும் சென்னைக்கு வந்துவிட எழிலிடம் போன் செய்து எப்படி வர வேண்டும் என கேட்கிறார். பின் அனைவரும் வீட்டிற்கு வர பாக்கியா வந்து அவர்களை வரவேற்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அவர்கள் வந்ததை நினைத்து ஈஸ்வரி எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார். பின் செல்வி வர கஸ்தூரி போல இருப்பதால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா நான் சொல்லும் போது நம்பவில்லை இப்போது பார்த்தீங்களா என கேட்கிறார். பின் மூர்த்தி மாமா எங்கே என கேட்க எழில் சென்று தாத்தாவை அழைத்து வருகிறார். அப்போது தாத்தாவால் நடக்க முடியாமல் வருகிறார். தாத்தாவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தாத்தா இங்கே எங்கே வந்தார்கள் என அதிர்ச்சி அடைய தாத்தா சந்தோசமாக இருக்கிறார்.

பின் கோபி வர வீட்டு வாசலில் நிறைய செருப்பு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உள்ளே வர வீட்டில் மூர்த்தி குடும்பத்தினர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மூர்த்தி கோபியை பார்த்து சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். பின் பாக்கியாவை அழைத்து இவங்களை எல்லாம் யார் வர சொன்னா என கேட்கிறார். அதை தான் வர சொன்னார் என சொல்ல பின் கோபி அவர்களை கிளம்ப சொல் என சொல்கிறார். ஆனால் பாக்கியா இந்த நேரத்தில் அவர்கள் எங்கே போவார்கள் என கேட்க அந்த நேரம் பார்த்துகண்ணன் வருகிறார். கண்ணனின் பெட்டி எல்லாம் கோபி ரூமில் இருக்க கண்ணன் பாண்டியனை பெட்டில் அமர வைக்கிறார்.

விஜே சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரம்? தோழி அளித்த பரபரப்பு தகவல்!

பின் பெட்டியில் துணிகளை எடுக்க பாண்டியன் பாத்ரூம் போய் விடுகிறான் அதனால் கோபிக்கு கோவம் வருகிறது. பாக்கியாவிடம் இதை எல்லாம் சுத்தம் செய்ய சொல்லி சத்தம் போடுகிறார். பின் இனியாவிடம் முல்லை தனம் பேச எங்கே படுக்க வைப்பது என பாக்கியாவிற்கு குழப்பமாக இருக்கிறது. பின் இனியா என் ரூமில் படுக்க வைத்துக் கொள்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் இனியா கயலை கொஞ்ச ஜீவா பாசமாக பேசுகிறார். அப்போது இனியா நீங்க என்னுடைய எழில் அண்ணன் போல இருப்பதாக சொல்கிறார். இனியாவை விடுமுறை என்றால் குன்னக்குடி வர சொல்லி ஜீவா சொல்கிறார்.

மறுபக்கம் மூர்த்தி தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உடம்பு சீக்கரம் சரியாகிவிடும் என சொல்ல, அம்மா தான் எங்களை திடீரென விட்டுவிட்டு போய்ட்டாங்க இரவெல்லாம் நன்றாக பேசிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் திடீரென இப்படி ஆகிவிட்டது. உங்களுக்கு சீக்கரம் சரியாகிவிடும் ஒரு நாள் ஊருக்கு வாங்க என சொல்கிறார். பின் ராமமூர்த்தி சரி என சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here