மூர்த்தி குடும்பத்தை அவமானப்படுத்தும் கோபி, ராதிகாவிடம் உண்மையை சொல்லும் மூர்த்தி தனம் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
மூர்த்தி குடும்பத்தை அவமானப்படுத்தும் கோபி, ராதிகாவிடம் உண்மையை சொல்லும் மூர்த்தி தனம் - இன்றைய
மூர்த்தி குடும்பத்தை அவமானப்படுத்தும் கோபி, ராதிகாவிடம் உண்மையை சொல்லும் மூர்த்தி தனம் - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
மூர்த்தி குடும்பத்தை அவமானப்படுத்தும் கோபி, ராதிகாவிடம் உண்மையை சொல்லும் மூர்த்தி தனம் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில், கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட மூர்த்தி கோபியை திருந்த சொல்லி மிரட்டுகிறார். பின் கோபி எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மூர்த்தியும் தனமும் ராதிகா வீட்டிற்கு வந்து கோபியின் குடும்பத்தை நீங்க பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” சீரியலில், கோபியுடன் மூர்த்தி தனியாக பேச செல்ல அப்போது மூர்த்தி ராதிகா எல்லா உண்மையும் சொல்லி விட்டதாகவும் அதனால் இனிமேல் இந்த குடும்பத்திற்காக நீங்க திருந்த வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி என்னை பேச நீ யார் என சொல்லி சத்தம் போடுகிறார். கோபியின் சத்தம் கேட்டு அனைவரும் வர வெளியே வந்த மூர்த்தி கோபியிடம் ஈஸ்வரி என்ன நடந்தது என கேட்கிறார். பயங்கர கோவமாக இருந்த கோபி இவன் இஷ்டத்துக்கு என்னை பேசுகிறான் அதெல்லாம் கேட்க இவன் யார் முதலில் எல்லாரையும் இங்கே இருந்து கிளம்ப சொல்லுங்கள் என சொல்கிறார்.

ஆனால் மூர்த்தி நீ செய்ததை சொல்லவா என கேட்க தனம் அவரை தடுத்து விடுகிறார். பின் கோபி எல்லாரையும் இங்கே இருந்து போக சொல்லி அவமானப்படுத்துகிறார். அவர் பேசுவதை கேட்டு ஜீவாவும் கதிரும் கோவப்படுகின்றனர். பின் எழில் ஈஸ்வரி மன்னிப்பு கேட்க அவர்கள் சமாதானம் ஆகிறார்கள். பின் எல்லாரும் வருத்தப்பட்டு கிளம்புகின்றனர். வெளியே சென்று வண்டியில் எற காத்திருக்க அப்போது மூர்த்தி மீண்டும் கோபியை பார்க்க செல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது எல்லாரும் வேண்டாம் என சொல்ல அவரை அப்படியே விட முடியாது என சொல்கிறார். பின் ரூமிற்குள் சென்று கதவை மூட அப்போது கோபி இப்போ எதற்கு இங்கே வந்தாய் என கேட்கிறார். அப்போது மூர்த்தி இந்த குடும்பத்தை பற்றி நினைக்காமல் நீ செய்வது ரொம்ப தவறு இப்படி பேசிவிட்டு வீட்டிற்கு சென்று என் கடை வேலைகளை மட்டும் பார்ப்பேன் என நினைக்காதே என மிரட்டுகிறார். வயதான அம்மா அப்பா மனைவி பிள்ளைகளை ஏமாற்ற எப்படி மனம் வந்தது என கேட்கிறார். கோபி உன்னால் என்ன செய்ய முடியும் என கேட்க நான் செய்ய தான் போகிறேன் என மூர்த்தி சொல்கிறார்.

பின் அனைவரும் கிளம்ப தயாராக தனம் பாக்கியாவை தனியாக அழைத்து செல்கிறார். இந்த நிலைமையில் உங்களை தனியாக விட்டு செல்வதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என சொல்ல, ஏன் என்ன ஆனது என பாக்கியா கேட்கிறார். என்ன நடந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என தனம் சொல்ல பாக்கியாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறது. பின் மூர்த்தி தனம் கிளம்ப நேராக ராதிகா வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே ராதிகா அவர்களை வரவேற்க நாங்க உங்களை தங்கச்சி போல தான் பார்க்கிறோம்

பாட்டியிடம் கேள்விகளை கேட்கும் லட்சுமி, பதில் சொல்ல முடியாமல் வருத்தப்படும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

நீங்க திருமணம் செய்ய இருப்பவர் அவ்வளவு நல்லவர் இல்லை. அவர் உங்களையும் அவரது குடும்பத்தையும் ஏமாற்றுகிறார் என சொல்ல, எனக்கு அவருக்கு குடும்பம் இருப்பது தெரியும் அதை விட்டு தான் வெளியே வர இருக்கிறார் என சொல்கிறார். இல்லை அவர் குடும்பத்தை பற்றி என்ன சொன்னார் என எனக்கு தெரியாது ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை என சொல்கிறார். தனம் அவரை தடுக்க அவருடைய குடும்பத்தை நீங்க பார்க்க வேண்டும் என சொல்லுங்கள் என சொல்கிறார். அவர் எப்படி காட்டுவார் என மூர்த்தி சொல்ல நீங்க கண்டிப்பாக அவரது குடும்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பறம் எல்லா முடிவுகளையும் எடுங்கள் என சொல்லிவிட்டு தனமும் மூர்த்தியும் கிளம்புகிறார்கள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here