கொடைக்கானலில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” & “பாக்கியலட்சுமி” சீரியல்கள் மகா சங்கமம் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
கொடைக்கானலில்
கொடைக்கானலில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" & "பாக்கியலட்சுமி" சீரியல்கள் மகா சங்கமம் - வைரலாகும் புகைப்படங்கள்!
கொடைக்கானலில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” & “பாக்கியலட்சுமி” சீரியல்கள் மகா சங்கமம் – வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் டாப் சீரியல்களான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியல்களின் மகா சங்கமம் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் அந்த எபிசோடுகளை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மகா சங்கமம்

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு சில சீரியல்களில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கதையின் விறுவிறுப்பை அதிகரிக்க இரு முக்கியமான சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் நடத்தப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மகா சங்கமம் ஏற்கனவே மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த மகா சங்கமம் புதுவிதமாக கொடைக்கானலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி நட்சத்திரங்கள் கொடைக்கானலில் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா ஹனிமூன் சென்றது போல கதை எடுத்து செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகா கழுத்தில் தாலி கட்டிய கோபி..சாபம் விட்ட ஈஸ்வரி.. கதறி அழும் குடும்பம் – பாக்கியலட்சுமி ப்ரோமோ!

Exams Daily Mobile App Download

அதே போல பாக்கியா மன நிம்மதிக்காக இனியா எழில் உடன் கொடைக்கானல் சென்று இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மகா சங்கமத்தில் கதை எப்படி எல்லாம் திருப்பங்களுடன் கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் சீரியல் ரசிகர்களிடம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!