‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா இறப்பு, உழைப்பை கொச்சைப்படுத்தாதீர்கள் – மீனா காட்டம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா இறப்பு, உழைப்பை கொச்சைப்படுத்தாதீர்கள் - மீனா காட்டம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மா இறப்பு, உழைப்பை கொச்சைப்படுத்தாதீர்கள் - மீனா காட்டம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா இறப்பு, உழைப்பை கொச்சைப்படுத்தாதீர்கள் – மீனா காட்டம்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மா இறந்து விட்டதால் இறுதி சடங்கு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகளில் டம்மி பயன்படுத்தியது குறித்து ஹேமா தனது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டாப் 5 சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. கடந்த வாரம் லட்சுமி அம்மா இறந்து விட்டதால் இறுதி சடங்குகள் அனைத்தும் தத்ரூபமாக நடத்தப்பட்டது. அதில் முகம் சுளிக்காமல் நடித்த நடிகை ஷீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதுமட்டுமில்லாமல் பாடையில் படுக்க வைத்தது முதல் குளிக்க வைத்தது என அனைத்தும் படமாக்கப்பட்டது. இதனால் அந்த வார TRP ரேட்டிங்கில் இந்த சீரியல் முதலிடம் பிடித்தது.

சமையல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்த பாக்கியா & கோ, ரசிகர்கள் கொண்டாட்டம் – ப்ரோமோ!

இந்நிலையில் அதே சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவர் ஹேமா டைரி என்ற யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் லட்சுமி அம்மா இறுதி நாள் படபிடிப்பு என வீடியோ ஒன்றை காட்டி உள்ளார். அதில் லட்சுமி அம்மா இறந்த போது இந்த டூப் தான் பயன்படுத்தப்பட்டது என சொன்னார். அப்போ அதில் டூப் தான் பயன்படுத்தப்பட்டது லட்சுமி அம்மா நடிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

அதில், லட்சுமி அம்மா இறப்பிற்காக அந்த பொம்மை உருவாக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அனைத்து காட்சிகளிலும் ஷீலா அம்மா தான் நடித்தார். தயவு செய்து யாரும் அவருடைய உழைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு பிணமாக நடித்த ஷீலா அம்மாவுக்கு முறைப்படி பரிகார சடங்கு செய்யப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!