ஜீவா கனவிலும் வந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மா? வெளியான புகைப்படம்!

0
ஜீவா கனவிலும் வந்த
ஜீவா கனவிலும் வந்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" லட்சுமி அம்மா? வெளியான புகைப்படம்!
ஜீவா கனவிலும் வந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மா? வெளியான புகைப்படம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா கதாபாத்திரம் இறந்துவிட்டதாக காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜீவா உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் தனம் கனவில் வந்தது போல ஜீவா கனவில் அம்மா வந்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணனின் அம்மா லட்சுமியாக நடிகை ஷீலா நடித்து வந்தார். அவர் இந்த சீரியலில் 3 ஆண்டாக கை கால் சரி இல்லாமல் வீல் சேரில் அமர்ந்தபடியே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த சீரியலில் அவர் கதாபாத்திரத்திற்கு வசனங்கள் அதிகமாக இல்லாமல் இருந்தாலும், அவர் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தார். இந்நிலையில் கண்ணன் பிரிவு தாங்க முடியாமல் லட்சுமி அம்மா இறந்து விட்டது போல காட்டப்பட்டது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா வெளிட்ட காமெடி வீடியோ – குவியும் லைக்குகள்!!

மேலும் அவர்களுக்கு இறுதி சடங்குகளும் நடத்தப்பட்டது. நிஜத்தை போல அனைத்து சடங்குகளும் நடத்தப்பட்ட நிலையில் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதன் பின் அவர் தனத்தின் கனவில் வருவது போல காட்டப்பட்டது. நான் எங்கேயும் போகவில்லை இங்கேயே தான் இருக்கேன் உன் குழந்தையை பார்க்காமல் நான் எங்கே போவேன், அதனால் குடும்பத்தில் யாரும் வருத்தப்படாமல் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னை நம்பி தான் இந்த குடும்பம் இருக்கிறது என சொல்கிறார்.

ரோஜா சீரியலில் இருந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வெங்கட் விலகல் – அதிர்ச்சி காரணம்! தயாரிப்பாளர்கள் விளக்கம்!

இந்நிலையில் தற்போது லட்சுமி அம்மா ஜீவாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் லட்சுமி அம்மா தனத்தின் கனவில் வந்தது போல, ஜீவாவின் கனவில் வந்திருப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் கதிர் கனவிலும் லட்சுமி அம்மா வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து எபிசோடுகளில் என்ன திருப்பங்கள் நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!