SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பான், ஆதார் இணைப்பு!
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பான், ஆதார் இணைப்பு!
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு!

வருமான வரி செலுத்துபவர்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், SBI வங்கியின் வாடிக்கையாளர்களும் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி சேவைகள்:

வங்கிகள் தற்போது காலத்தின் கட்டாயமாகி விட்டது. அதாவது அரசு தரும் உதவித்தொகைகளை பெறுவது, பணம் சேமிப்பு, பணம் அனுப்புவது, பெறுவது உள்ளிட்ட தினசரி பணிகளுக்கு வங்கி சேவைகள் இன்றியமையாததாகும். அந்த வகையில் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது பான் கார்டை, ஆதார் உடன் இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த செயல்முறையின் மூலம், அரசாங்கம் உங்கள் பணப்பரிவர்த்தனைகளை எளிதில் கண்காணித்து மோசடி அல்லது வரி ஏய்ப்பை தவிர்க்கிறது.

செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கல் – அமைச்சர் தகவல்!

அந்த வரிசையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் உடன் பான் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் வங்கி சேவையில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்த ட்வீட்டில், ‘SBI வாடிக்கையாளர்கள் ஆதார் உடன் பான் இணைப்பது கட்டாயமாகும். இல்லையெனில் உங்கள் பான் எண் செயலற்றதாக இருக்கும். மேலும் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்கள் எழும்’ என தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31 வரை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இச்சேவைக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பான் கார்டை ஆதார் உடன் இணைக்க புதிய வருமான வரி போர்டலை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்க்காணும் செயல்முறையின் மூலம் உங்கள் பான் – ஆதார் இணைப்பை எளிதாக செய்து கொள்ளலாம். அதற்காக முதலில்,

  • வருமான வரியின் https://incometaxindiaefiling.gov.in/ இணையத்தை திறக்கவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில், Link Aadhaar என்ற ஆப்சன் காண்பிக்கப்படும்
  • அதில் Know About your Aadhaar – PAN linking Status என்பதை தேர்வு செய்யவும்.
    பின்னர் புதிய பக்கம் திறக்கும்.

TN Job “FB  Group” Join Now

  • அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளின் விவரத்தை உள்ளிடவும்.
  • இந்த விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, View Link Aadhaar Status என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இறுதியில் உங்கள் ஆதார் பான் இணைப்பு நிலை தோன்றும்.

உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ என்ற இணையதளத்தையும் இதில் ஏதேனும் சிக்கல் அல்லது கேள்விகள் இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!