தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியம் – முக்கிய கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியம் - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியம் - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியம் – முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு தீவிரமான ஒரு முடிவினை எடுக்க வேண்டும் என்று பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதே போல் மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் இது குறித்த செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழக அரசின் முதுகெலும்பாக இருந்து வரும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். அவர்களின் உரிமைகளை தாமதப்படுத்துவது எந்த விதத்திலும் நியமனான ஒன்று கிடையாது. அது மட்டும் அல்லாமல் புதிய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை பின்பற்ற வேண்டும்.

Bank Holidays in September – அடுத்த மாதம் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை! முழு பட்டியல்!

ஊதிய முரண்பாட்டினை உடனடியாக களைய வேண்டும். மத்திய அரசு மருத்துவ ஊழியர்கள் பெரும் சம்பளத்தினை போலவே அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு என்று அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும். நிதி நெருக்கடி என்று ஒரு விஷயத்தினை வைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பது தவறு.

TN Job “FB  Group” Join Now

தமிழக அரசு மருத்துவர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். இந்த கொரோனா காலத்தில் தங்களது உயிரினை பணயம் வைத்து செயலாற்றி வந்தனர். அதனால் அவர்களது கோரிக்கையினை உடனடியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10, 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம் ஆகும். இதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்”.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!