பாமாயில் விலை அதிரடி சரிவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! இன்றைய விலை நிலவரம் இதோ!
விருதுநகர் சந்தையில் கடந்த வாரம் பாமாயில் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று ஒரு டின்னுக்கு ரூபாய் 20 சரிந்துள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எண்ணெய் விலை:
விருதுநகர் சந்தை விலை நிலவரப்படி கடந்த வாரம் பருப்புகளின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது. அரிசியை தொடர்ந்து பருப்புக்கும் அதிக விலையில் கொடுப்பதா? என இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர். இந்த வாரம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உருட்டு உளுந்து ஒரு மூட்டைக்கு ரூ. 500 வரை குறைந்துள்ளது. தற்போது 100 கிலோ உளுந்து ரூ.13,000 -க்கு விற்பனையாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து பாசிப்பருப்பு ரூ. 200 சரிந்து மூட்டை ரூ.1800 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல துவரம் பருப்பு கடந்த வாரம் 16,500-க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 16,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாமாயில் விலை 15 லிட்டர் ரூ.1,380 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பலரும் பாமாயில் வாங்குவதை தவிர்த்து வந்தனர். இந்த வாரம் அதன் விலை சற்று குறைந்துள்ளது அதாவது ஒரு டின்னுக்கு 20 குறைந்து ரூ. 1,360-க்கு விற்பனையாகி வருகிறது.