பாக்கியலட்சுமி’ கோபி வெளியிட்ட சோக வீடியோ – வருத்தத்தில் ரசிகர்கள்!

0
பாக்கியலட்சுமி' கோபி வெளியிட்ட சோக வீடியோ - வருத்தத்தில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி' கோபி வெளியிட்ட சோக வீடியோ - வருத்தத்தில் ரசிகர்கள்!பாக்கியலட்சுமி' கோபி வெளியிட்ட சோக வீடியோ - வருத்தத்தில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி’ கோபி வெளியிட்ட சோக வீடியோ – வருத்தத்தில் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் அவரது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும் சதீஷ் வெளியிட்ட வீடியோ குறித்து இப்பதிவில் காணலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரின் நாயகி பாக்யலட்சுமியாக வரும் சுசித்ரா ஷெட்டி கர்நாடகாவில் இருந்து தமிழ் சின்ன திரை உலகிற்கு அடியெடுத்து வைத்தவர். இவருக்கு கணவராக நடிகர் சதீஷ் குமார் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகும். இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்புக்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த கதையின் நாயகனாக வரும் கோபி தான் இத்தனை விறுவிறுப்பிற்கும் காரணமாக உள்ளார். அவருடைய நெகட்டிவ் ரோலால் சீரியலின் டிஆர்பி ரேட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார். சீரியலின் பெயர் தான் பாக்கியலட்சுமி ஆனால் கதையின் முக்கிய தூணாக கோபி இருக்கிறார். இந்த தொடரில் தன்னுடைய மனைவி பாக்கியாவிற்கு தெரியாமல் கோபி அவரது முன்னாள் காதலி ராதிகாவுடன் உறவில் இருக்கிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபியின் உண்மை முகம் தெரியவர அடுத்து என்ன நடக்கும் என்று சீரியல் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கோபி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோபி & ராதிகாவை சேர்த்து வைக்கும் பாக்கியா, மறுக்கும் இனியா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!

வீடியோவில் பேசிய சதீஷ்” ‘கோபியை மூஞ்சில குத்தி குப்பைல போடுங்க’ என்று ரசிகர்கள் பேசுகிறார்கள். நான் இன்னைக்கு ஒரு முக்கியமான பெண்மணி பற்றி போறேன்னு சொல்லி வீடியோ வை ஆரம்பித்தார். தன்னுடைய 5 வயதில் தம்பியை இழந்து விபத்தில் பெற்றோரையும் இழந்து ஒரு அனாதையாக சென்னைக்கு வந்தேன். இரண்டு சட்டை, இரண்டு டிரௌசர் தான் வைத்திருந்தேன். என் அத்தை தான் என்னை வளர்த்தாங்க, எனக்கு மொழி பேச சொல்லி குடுத்தாங்க என்றார். எனக்கு வாழ்க்கை கொடுத்து, வருமானம் கொடுத்து, பெயர் புகழ் கொடுத்து இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான், என்னை பொறுத்தவரை தமிழ் மொழி மட்டுமல்ல அது ஒரு கலாச்சாரம் என்றும் வாழ்க தமிழ்” என்று வீடியோவில் பேசியிருக்கிறார். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோபியின் வாழ்க்கையில் இத்தனை சோகமா என்று கவலையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here