அழுது கொண்டே வீடியோ வெளியிட்ட “பாக்கியலட்சுமி” ராதிகா – காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!

0
அழுது கொண்டே வீடியோ வெளியிட்ட
அழுது கொண்டே வீடியோ வெளியிட்ட "பாக்கியலட்சுமி" ராதிகா - காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!
அழுது கொண்டே வீடியோ வெளியிட்ட “பாக்கியலட்சுமி” ராதிகா – காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிபர். அவர் கதறி அழுது கொண்டே வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

நடிகை ஜெனிபர்:

சின்னத்திரையில் பிரபலமான சீரியலில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பின் படி ராதிகாவுக்கு கோபி பற்றிய உண்மை எல்லாம் தெரிய வந்துள்ளது. அதனால் ராதிகா பாக்கியா வாழ்க்கை முக்கியம் என்பதால் கோபியை பிரிய முடிவு செய்கிறார். கோபி பல முறை ராதிகாவிடம் வந்து கெஞ்சியும் கூட, ஆனால் ராதிகா கோபியை வேண்டாம் என வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். ராதிகாவின் நடவடிக்கையை பார்த்து கோபி மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

மறுபக்கம் கோபி இப்படி இருப்பதை நினைத்து பாக்கியா மற்றும் குடும்பத்தினர் வருத்தமாக இருக்கின்றனர். இப்படி பரபரப்பான கதை உடன் அந்த சீரியல் நம்பர் ஒன் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் முன்னதாக நடிகை ஜெனிபர் நடித்து வந்தார். அதன் பின் அவர் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதால் சீரியலை விட்டு விலகிவிட்டார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

மூர்த்தி ஆப்ரேஷனிற்கு மல்லியிடம் பணம் கேட்கும் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் புதிய ட்விஸ்ட்!

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கை பற்றி பல வீடியோக்களை ஜெனிபர் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது ஜெனிஃபர் கதறி அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய அப்பாக்காக இந்த வீடியோ வெளியிடுவதாகவும், அவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை எனவும், அவரால் நடக்க கூட முடியாத நிலையில் இருப்பதாகவும், அனைவரும் அவருடைய அப்பா நலமாக வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here