வீட்டுக்கு வர மறுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!

0
வீட்டுக்கு வர மறுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் - சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!
வீட்டுக்கு வர மறுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் - சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!
வீட்டுக்கு வர மறுக்கும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை விட்டு விலக முடிவு செய்த பாக்கியா அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இப்போது பாக்கியாவை திரும்ப வீட்டுக்கு அழைக்கும் முயற்சியில் கோபியின் குடும்பத்தார் தோல்வி அடைவது போல சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் ‘பாக்கியலட்சுமி’. அதாவது, ஒரு சாதாரண இல்லத்தரசியின் வாழ்க்கை, அதில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், ஏமாற்றம், அவமானம், தோல்வி போன்ற கதைக்களங்களை மையமாக வைத்து வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கணவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் அந்த சூழ்நிலையை எப்படி தைரியமாக எதிர்கொள்வாள் என்ற உணர்வை யதார்த்தமாக படம் பிடித்து காட்டி வருகிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் தற்போதைய கதைக்களம்.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் இதுவரை, கோபியை விட்டு விலக முடிவு செய்யும் பாக்கியா விவாகரத்து பத்திரத்துடன் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். இப்போது கோபியின் திட்டமிட்ட சதியால் ஏமாற்றம் அடைந்த பாக்கியா அதில் இருந்து வெளியே வருவதற்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது. மறுபக்கத்தில் கோபி என்னதான் தவறு செய்திருந்தாலும் பாக்கியா வீட்டுக்கு வர வேண்டும், அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் ஈஸ்வரி உறுதியாக இருக்கிறார். அதே போல செழியன், இனியா என வீட்டில் உள்ள மற்றவர்கள் பாக்கியா வீட்டுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

தமிழக பள்ளி மாணவ-மாணவிகள் கவனத்திற்கு – இலவச சைக்கிள் வழங்கும் பணி தீவிரம்!

ஆனால், கோபியை கண் கண்ட தெய்வமாக நம்பி, அவரால் ஏமாற்றப்பட்டு தனி மரமாக நிற்கும் பாக்கியா இனிமேல் அந்த வீட்டுக்கு வரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடில் கூட பாக்கியாவை அழைப்பதற்காக வீட்டுக்கு வரும் இனியா மற்றும் ஜெனியிடம் இனிமேல் அங்கு வரப்போவதில்லை என்று உறுதியாக கூறுகிறார் பாக்கியா. இதை தொடர்ந்து ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்து வரும் கதைக்களத்தில், தனது சுயமரியாதையை விட்டுக் கொடுத்து பாக்கியா வீட்டுக்கு வருவாரா அல்லது தனக்கான வாழ்க்கையை இனி வாழ்வாரா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!