உங்களுக்கா இந்த நிலைமை.. முன்னாள் கணவரின் திருமணத்தில் சமையல்காரியாக மாறிய பாக்கியா!

0
உங்களுக்கா இந்த நிலைமை.. முன்னாள் கணவரின் திருமணத்தில் சமையல்காரியாக மாறிய பாக்கியா!
உங்களுக்கா இந்த நிலைமை.. முன்னாள் கணவரின் திருமணத்தில் சமையல்காரியாக மாறிய பாக்கியா!
உங்களுக்கா இந்த நிலைமை.. முன்னாள் கணவரின் திருமணத்தில் சமையல்காரியாக மாறிய பாக்கியா!

விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றாக “பாக்கியலட்சுமி” சீரியல் இருக்கிறது. இல்லத்தரசிகளின் கஷ்டங்களை பற்றி இதுவரை கதையில் காட்டப்பட்டு வந்த நிலையில், இப்போது உச்சகட்ட திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதாவது தனது கணவரின் திருமணத்தில் பாக்கியா சமையல்காரியாக மாற இருக்கிறார். இந்த ட்விஸ்ட் குறித்து இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இல்லத்தரசியின் கதை என்ற டைட்டில் உடன் தொடங்கப்பட்ட சீரியல் என்றாலும், அடிக்கடி சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீரியல் இருக்கிறது. குறிப்பாக தமிழ் சின்னத்திரையில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு மவுசு அதிகம் தான். அதிலும் முன்னோடியாக ஒவ்வொரு வீட்டிலும் மனைவிக்கும், அம்மாவிற்கும், மருமகளுக்கும் நடக்கும் காட்சிகளை மையமாக வைத்த காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் கூடுதல் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதத்தில் கோபியும் பாக்கியாவும் விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டனர். கோபி சற்று இறங்கி வந்த போதும், வாழ்க்கையை விட சுயமரியாதை தான் முக்கியம் என நினைத்து பாக்கியா தாமாக சென்று விவாகரத்து வாங்கி கொண்டார். இதை சாதகமாக வைத்து கோபி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் செழியன், ஈஸ்வரி, இனியா கோபி வீட்டை விட்டு சென்றதற்கு பாக்கியா தான் காரணம் என சொல்லி அடிக்கடி மனது கஷ்டப்படும் படி பேசுகின்றனர்.

கோபி ராதிகாவை திருமண கோலத்தில் பார்த்த பாக்கியா, திருமணம் நடக்குமா? பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

இதற்கிடையே வீட்டில் கரண்ட் பில், ஸ்கூல் பீஸ் என வர பாக்கியா பணம் இருந்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற முடிவுக்கு வருகிறார். அதற்காக பெரிய சமையல் ஆர்டர் வாங்க விண்ணப்பிக்க, அதில் தேர்வாகிவிடுகிறார். ஆனால் முதலில் சிறிய சமையல் ஆர்டர் கொடுப்பதாக முதலாளி சொல்ல, ஆர்டர் கிடைத்ததை நினைத்து பாக்கியா சந்தோசப்படுகிறார். ஆனால் அதில் தான் பெரிய திருப்பம் வர இருப்பது பாவம் பாக்கியாவிற்கு தெரியாது. பாக்கியாவிற்கு கிடைத்த முதல் சமையல் ஆர்டர் கோபி ராதிகாவின் திருமணத்திற்கு சமைக்க தான். இந்த உண்மை பாக்கியாவிற்கு தெரிய வந்தால் அவருடைய மனநிலை எப்படி இருக்கும் என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!